ஞாயிறு, 1 நவம்பர், 2020

தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் தமிழரசனின் தாயார் பதூசு அம்மையார் மறைவு. ( 110 வயது )

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாடு விடுதலைப் படை
தலைவரான தமிழரசனின் தாயார் பதூசு அம்மையார் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

1980களில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கியவர் தமிழரசன். 1987-ல் பொன்பரப்பி வங்கி கொள்ளை சம்பவத்தின் போது தமிழரசன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டன தமிழரசனின் தாயார் பதூசு அம்மையாரின் நூற்றாண்டு விழா சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இயக்கங்களால் கொண்டாடப்பட்டது. 100 வயதை கடந்த பதூசு அம்மையார் முதுமையால் சனிக்கிழமை மாலை காலமானார். 

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவரும், தமிழ் தேசியப் போராளியுமான தோழர் தமிழரசன். தாயார் பாதூசா அம்மாள் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம் என கூறியுள்ளார்.Image

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக