செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது!
news 7tamil : சம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருகிறது.நீர்ப்பிடிப்பு
பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு
ஆயிரத்து 86 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம்
நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21.13 அடியை
எட்டியுள்ளது. அதன் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில்
தற்போது 2 ஆயிரத்து 889 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
குடிநீருக்காக ஏரியில் இருந்து 68 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் நீர்தேக்கமானது 22 அடியை எட்டினால் உபரி நீர்
திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு
இடங்களில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அத்திப்பட்டு,
புதுநகர், சின்ன மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தச்சூர் இணைப்பு
சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து
வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக