செவ்வாய், 13 அக்டோபர், 2020

குஷ்பு வைத்த டிமாண்ட்.. ... தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பதவி

தாமோதரன் பிரகாஷ் nakkeeran : குஷ்பு விலகல் தொடர்பாக பா.ஜ.க.வில் நடைபெற்ற பேரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத்தொடங்கியுள்ளன. கடந்த மாதம் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளை அறிவித்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா, ஏற்கனவே தமிழக பாஜகவிற்கான பொறுப்பு வகித்த முரளிதரராவ் போன்றோர் இடம்பெறவில்லை. அதற்கு காரணம், குஷ்பு பா.ஜ.க.விற்கு வரப்போகிறார் என்கிற செய்திதான். ஒரு மாதத்திற்கு முன்பே குஷ்புவின் கணவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகனின் ஏற்பாட்டில் ஜெ.பி.நட்டாவை சந்தித்தார். அந்த சந்திப்பில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளராக இயங்கும் பூபேந்திரயாதவ், கர்நாடகாவில் அமைச்சராக இருக்கும் ரவியும் இருந்தார்கள். அந்த சந்திப்பு முடிந்தவுடன் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருக்கிறது என குஷ்பு ட்வீட் செய்தார். அதனை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தார்கள். ">உடனே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் குஷ்புவிடம் பேசினார். காங்கிரஸில் நல்ல பொறுப்பு வாங்கித்தருவதாக உறுதி அளித்தார். குஷ்பு பாஜகவில் சேரப்போகிறார் என செய்திகள் சிறகடித்து பறந்தது. வேணுகோபாலுடன் பேச்சுவார்த்தையில் இருந்ததால் குஷ்பு பாஜகவில் சேரும் செய்திகளை வன்மையாக மறுத்தார்.

 

குஷ்பு பாஜகவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸுக்கு தெரிந்தவுடன் எந்த பதவியும் தரவில்லை. இதனால் விரத்தியடைந்த குஷ்பு மறுபடியும் எல்.முருகன், ஜெ.பி.நட்டா, பூபேந்திரயாதவ் மற்றும் கர்நாடக அமைச்சரான ரவி ஆகியோர் முலம் பாஜகவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டார். அவர்கள் நேற்று டெல்லி வருமாறும், பாஜகவில் இணையுமாறும் கூறினர். 

 

அதன்படி ரவி, எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்தார். இணைவதற்கு முன்பு அவர் பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பதவியை கொடுக்க வேண்டும், தன்னை தமிழகத்திற்குள் சுருக்கிவிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு என்ன பதவி அளிப்பது என்பது பற்றி பாஜக இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது டெல்லி பாஜக வட்டாரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக