புதன், 7 அக்டோபர், 2020

நான் டிராக்டரில் அமர்ந்ததை விமர்சிப்பதா; பிரதமரின் சொகுசு விமானத்தை கண்டுகொள்ளாதது ஏன்? - ராகுல்காந்தி கேள்வி

தினத்தந்தி : நான் டிராக்டரில் சோபாவில் அமர்ந்ததை விமர்சிப்பதா என்றும் பிரதமரின் சொகுசு விமானத்தை கண்டுகொள்ளாதது ஏன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார

புதுடெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டரில் சோபாவை போட்டு அமர்ந்து சென்றார். இதை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கிண்டல் செய்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், ராகுல்காந்தி நேற்று கூறியதாவது:என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர், டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன. அதையெல்லாம் ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை. தன்னுடைய நண்பர் டிரம்ப், அதேபோன்ற விமானத்தை வைத்திருப்பதால், மோடியும் கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கி உள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக