வியாழன், 15 அக்டோபர், 2020

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.. கொரோனா பாதிப்பு...

கொரோனா பாதிப்புக்கு உள்ளான அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்
Add caption
maalaimalar : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சென்னை: அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் செயல்பட்டு வந்தார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 6-ந்தேதி வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், கொரோனா மற்றும் வேறுசில உடல்நல பிரச்சனைகள் காரணமாக வெற்றிவேலின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்திருந்தது. மேலும், திடீர் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதையடுத்து, செயற்கை சுவாசக்கருவி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக