புதன், 21 அக்டோபர், 2020

பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து அழுகிய நிலையில் திருநங்கை உடல் மீட்பு : கோவையில் பயங்கரம்!!

m.dailyhunt.in : கோவை சாய்பாபா காலனி பகுதியில் அழுகிய கோவைநிலையில் திருநங்கையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அருகில் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பிளாஸ்டிக் டிரம்மைிறந்து பார்த்த போது அதனுள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருந்தது.

மேலும், அந்த சடலம் திருநங்கையுடையது என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த திருநங்கையின் பெயர் சங்கீதா என்பது தெரியவந்துள்ளது.   தொடர்ந்து அப்பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக