ஞாயிறு, 11 அக்டோபர், 2020

தேர்தல் பணியை தொடங்கியது திமுக.. டி ஆர் பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி

 தேர்தல் பணியை தொடங்கியது திமுக!

minnambalam :எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகளை முறைப்படி தொடங்கி விட்டது திமுக.  2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை இன்று (அக்டோபர் 11) அறிவித்திருக்கிறார் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

அவரது அறிவிப்பின்படி பொருளாளர் டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.     இந்த குழு விரைவில் கூடி முதற்கட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளும். அதன்பிறகு குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளைப் பெற்று அதை விவாதித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பார்கள் என்று கூறுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.   வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக