ஞாயிறு, 4 அக்டோபர், 2020

ராகுல் டிராக்டர் பேரணி! ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விவசாயிகளுடன் டிராக்டர் பேரணியை...

maalaimalar :மோகா:  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.முதல் நாளான இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள பத்னி காலன் பகுதியில் இருந்து பேரணி தொடங்கியது.  துவக்க நிகழ்ச்சியில், ராகுல் காந்தியுடன் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஹரிஷ் ராவத், சித்து உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை கண்டித்து ராகுல் மற்றும் தலைவர்கள் உரையாற்றி முடிந்ததும் பேரணி தொடங்கியது.   ராகுல் காந்தி, முதல்வர் அமரீந்தர் சிங், மாநில தலைவர் சுனில் ஜாகர் ஆகியோர் ஒரே டிராக்டரில் அமர்ந்து பயணித்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் அணிவகுத்து சென்றனர். இந்த பேரணி நாளை மறுநாள் அரியானாவில் நிறைவடையும்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து  அரியானாவிற்கு ராகுல் காந்தியின் பேரணி வரும் பாதை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தியை அரியானா மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என மாநில உள்துறை மந்திரி அனில் விஜ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக