சனி, 24 அக்டோபர், 2020

நடிகை விஜயலட்சுமி வாடகை செலுத்தவில்லை ஏமாற்றுகிறார்... காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் !

    newstm.in ப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வருகிறார்.  அன்மையில் தான் அதிகளவில் மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வீடியோ வெளியிட்டிருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவர் வெளியிட்டிருந்த விடியோவில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை குற்றம்சாட்டியிருந்ததோடு, சீமான் மற்றும் ஹரி நாடாரைக் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு தகவல்களை அவ்வப்போது கூறி வந்த விஜயலட்சுமி தற்போது ஒரு புகாரில் சிக்கியுள்ளார்.  

சென்னை  திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  தங்கும் விடுதியில் நடிகை விஜயலட்சுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திருவான்மியூர் காவல் நிலையத்தில் விடுதியின் உரிமையாளர் சமீர் என்பவர், நடிகை விஜயலட்சுமி மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில், நடிகை விஜயலட்சுமி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்களது விடுதியில் தங்கி வருவதாகவும், தங்கிய நாள் முதல் இதுவரை அறை வாடகையான ரூ.5 லட்சம் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

வாடகை பணத்தை கேட்டதால், பல முறை தன்னை அலைகழித்து நடிகை விஜயலட்சுமி ரூ. 2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மீதமுள்ள கட்டண தொகையை கேட்டால், தன்னிடம் தற்போது பணம் இல்லையென்றும், பணம் வரும்போது தருவதாகவும் அவர் அலட்சியமாக பதில் கூறுவதாக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அறையை காலி செய்ய மறுப்பதாகப்பும் கூறியுள்ளார்.

எனவே வாடகை பணத்தை தருவதற்கும், அறையை காலி செய்வதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக