வியாழன், 22 அக்டோபர், 2020

நிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்..

Hemavandhana - tamil.oneindia.com : லக்னோ: நிர்வாணமாக இளம்பெண்ணின் சடலம் கால்வாயில் மிதந்து வந்ததை பார்த்து ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. 

கொடுமையின் உச்சமான உபியில்தான இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.. படிப்பறிவில்லாத காரணங்கள், அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, சாதீய உக்கிரம் போன்ற காரணங்களால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாக கட்டவிழ்த்துப்பட்டு கொண்டே இருக்கின்றன. இன்னும் ஹத்ராஸ் சம்பவத்துக்கே விடிவு கிடைக்காத நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன.. இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயசு இளம்பெண் அவர்.. அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞரை காதலித்து வந்தார்.. இருவருமே உயிருக்கு உயிராக காதலித்தவர்கள்.. .அதனால் ஹோட்டல்,சினிமா என்று ஜாலியாக சுற்றி வந்தனர்.. இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. 

அதனால் மகளை கண்டித்தனர்.. காதலுக்கும் எதிர்ப்பு சொன்னார்கள். குடும்ப சூழலை எடுத்து சொல்லவும், அந்த பெண், காதலை கைவிட முடிவெடுத்தார்.. அடுத்த சில தினங்களில் காதலனை சந்திப்பதையும் தவிர்த்தார். இதனிடையே காதலியிடம் பேச முடியாமல் காதலன் தவித்துள்ளார்.. பல முறை போன் செய்தும், அந்த பெண் அதை அட்டண்ட் செய்யவில்லை.. மெசேஜ் அனுப்பியும் பதில் இல்லை.. இதனால் காதலன் ஆத்திரமடைந்தார். 

தன்னுடைய நண்பர்களை சிலரை சேர்ந்து, அந்த பெண்ணை கடத்திவிட்டார்.. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வைத்து, காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்தார் அந்த இளைஞர்..

 இறுதியில் விஷயத்தை வெளியே சொன்னால் ஆபத்து என்பதால், அங்கேயே காதலியை கொன்று, சடலத்தை ஒரு கால்வாயில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர். கால்வாயில் நீர் நிறைந்து காணப்படுவதால், நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மிதந்தபடியே வந்துள்ளது.. 

இதை பார்த்த அந்த பகுதி போலீசுக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. அந்த ரிப்போர்ட்டில்தான் பெண் மிக கொடூரமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தனர்.. அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. நாளுக்கு நாள் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதாலும், குற்றங்கள் மிகுந்து வருவதாலும் யோகி அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக