செவ்வாய், 13 அக்டோபர், 2020

150 முதல் 200 இடங்களை வைத்து கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு ... ?

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: ஆட்சியை பிடிப்பது, முதல்வர் ஆகியே தீருவது என்ற குறிக்கோளுடன் உள்ளது திமுக.. அந்த வகையில் இந்த முறை தேர்தலில் மிக நிதானமான முடிவுகளை எடுத்து வருகிறது... அந்த வகையில் கூட்டணிகளுக்கு எவ்வளவு சீட் ஒதுக்குவது என்ற பேச்சுக்களும் மும்முரமாக எழுந்து வருகிறது. இந்த முறை பாமகவை விட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்குள் இழுக்க முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.. எப்படியும் திமுகவால் தனித்து போட்டியிட முடியாது.. 

எனவே,150 முதல் 200 சீட் என பெரும்பாலான இடங்களை வைத்து கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு பிரித்து தரலாம் என்ற ஐடியாவில் உள்ளது விசிக, மதிமுக நிலைமை தெரியவில்லை. அவர்களுக்கு சின்னம் ஒரு பிரச்சனையாக உள்ளது.. ஒருவேளை இவர்களுக்கு கூடுதல் சீட் கிடைக்காவிட்டால், அல்லது உதயசூரியன் சின்னம் என்று மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டால், வெளியில் இருந்து ஆதரவு தரும் நடவடிக்கையில் இறங்குவார்களா என தெரியவில்லை.. ஏனென்றால், இப்போதைக்கு இவர்களின் எம்பிக்கள் திமுகவில்தான் உள்ளனர்..அதனால் வேறு கட்சிக்கும் போக முடியாத நிலை உள்ளது. 

இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பிளஸ் உள்ளது.. இது ஒரு தேசிய என்பதால், சின்னம் பிரச்சனை எழ வாய்ப்பில்லை.. சொந்த கட்சி சின்னத்தில்தான் போட்டியிட்டாக வேண்டும்.. ஆனால், சீட் விவகாரத்தில் திமுக கெடுபிடி காட்டும் என்று தெரிகிறது.. கடந்த முறை 41 சீட்கள் எடுத்த எடுப்பிலேயே தரப்பட்டது.. ஆனால், இந்த முறை அந்த அளவுக்கு இருக்காது என்கிறார்கள்.  காங்கிரசுக்கு, அதிக சீட்டுகளை தர கூடாதென்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.. தமிழகத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு அவ்வளவாக இல்லை என்று பிரசாந்த கிஷோர் டீம் ஏற்கனவே சொல்லியும் வருகிறது.. 

அதனதால் ஒரு ராஜ்யசபா எம்பி, மற்றும், 15 சட்டசபை தொகுதிகள் தரலாம் என்று திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை ராஜ்யசபா, சீட் வேண்டாம் என்றால் கூடுதலாக 5 சட்டசபை தொகுதிகள் தரலாம் என்று முடிவாகி உள்ளதாம்.. ஆனால், இதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா என்று தெரியாது.. 

40 தொகுதிகள் என்ற அடிப்படையில்தான், பேச்சையே ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறதாம்.. எப்படி இருந்தாலும் கடைசியில் 30 சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற தகவல் கசிந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக