வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிரான்ஸ ஆசிரியர் கொலை ..15 மாணவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்

thinakkural - பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் : இஸ்லாமிய தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர் Samuel Paty அவருடைய முகம் பிரெஞ்சுக் குடியரசின் முகம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார். Sorbonne பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் அதிபர் François Holland, பரிஸ் நகரத்தின் முதல்வர் Anne Hidalgo, முன்னாள் பிரதமர்களான Edouard Philippe, Manuel Valls Bernard Cazeneue, Jean Marc Ayrault ஆகியோருடன், அழைக்கப்பட்ட 400 முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதேவேளை,

ஆசிரியர் Samuel Paty அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் 14 வயது 15வயது மாணவர்கள் நீதிபதியினால் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள்.   இந்த மாணவர்கள்தான் ஆசிரியரை கொலையாளிக்குக் காட்டிக் கொடுத்தார்கள்.  இந்த மாணவர்களுக்குக் கொலையாளி பணம் வழங்கி ஆசிரியரைக் காட்டித்தருமாறு கேட்டிருந்தார்.

ஆசிரியர் பாடசாலை வகுப்பில் இறைதூதரின் கேலிச்சித்திரத்தை காண்பிப்பதற்காக அவரை மன்னிப்பு கோர வைப்பதற்காகவே அவரை நாடி வந்திருப்பதாக இந்த கொலையாளி மாணவர்களிடம் கூறியிருக்கின்றார்.

இதனை அடுத்தே மாணவர்கள் ஆசிரியரை காட்டிக் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆசிரியரைக் காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக 14 வயது 15வயது மாணவர்கள் தற்பொழுது சிறைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சந்தேக நபரும் தற்பொழுது சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நபர் கொலையாளி உடன் தொலைபேசியில் உரையாடி இருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.

தீவிர இஸ்லாமிய சிந்தனை வாதியான அப்துல் ஹக்கீமுக்கும் தற்பொழுது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக