சனி, 12 செப்டம்பர், 2020

NEET மத்திய அரசின் பிடிவாதம் , நீதிமன்றத்தின் மாணவர்கள் மீதான அக்கறையின்மை.. கொலை கருவி!

Kanimozhi MV : · முத்து முத்தா கையெழுத்து I am sorry , I am tired என்பதற்கு தான் இறுதியில் பயன்பட்டது என்றால் எதற்கு நமக்கு சமூக நீதி மண் என்ற அடையாளம் நம்மால் ஒன்றுமே செய்ய இயலவில்லை இப்படி வருடாவருடம் பிள்ளைக்கறியை புசிக்கும் பார்ப்பனியத்திற்கு நம்மால் சாவுமணி அடிக்க முடியவில்லை நமக்கான வாய்ப்பு வரும் ஆனால் அதற்குள் எத்தனை குழந்தைகள் இப்படி மாண்டுப்போவார்களோ? 

Karthikeyan Fastura : இப்போ தான் படித்தேன் மதுரை மாணவி தற்கொலை


செய்தியை. திக்கென்று இருந்தது. இன்னும் எத்தனை எத்தனை கொலைகளை இந்த நீட் தேர்வு செய்யும். இதற்கு முழு பொறுப்பு ஆளும் மத்திய அரசும் கையாலாகாத மாநில அரசும் தான் காரணம். கொலைகார அரசுகள். பள்ளிகளில் பெற்ற மதிப்பெண்கள் போதாதா ஏன் இரண்டாம் முறையாக இன்னொரு தேர்வு அதே பள்ளி பாடங்களுக்கு ? இது முட்டாள்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும், வன்முறையாகவும் தெரியவில்லையா உங்களுக்கு? மத்திய அரசின் பிடிவாதம் , நீதிமன்றத்தின் மாணவர்கள் மீதான அக்கறையின்மை எல்லாம் தான் கொலை கருவிகள் பிள்ளைகளை இந்த அரச வன்முறையில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், அதைவிட ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. தயார்படுத்துதல் வேறு தள்ளிவிடுதல் வேறு.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 60% இரண்டாம் முறையாக தேர்வெழுதியவர்கள். நீட் மட்டுமல்ல எந்த ஒரு அரசு தேர்வும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என்று தான் அனைத்து புள்ளிவிவரங்களும் கூறுகிறது. இது சொல்லும் செய்தி என்னவென்றால் இதன் கடினமான தன்மையை, அதற்கு தேவையான பயிற்சியை, திரும்பவும் எழுத வேண்டியிருக்கும் என்ற மனப் பக்குவத்தை உணர வேண்டும். பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முயற்சியை தம்பட்டம் அடிப்பதை


விட்டுவிட வேண்டும். நம் சமூகம் போல ஒரு மூட சமூகம் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. பேசுவதற்கு எதுவுமே இல்லாவிட்டால் என்ன பண்ற ? எது பண்ற ? என்று பிள்ளைகளை நோண்டுவதில் இன்பம் காணும் சமூகம். பிள்ளைகளை பார்த்தால் நீ எது பண்ணினாலும் சந்தோசமாக பண்ணு என்று சொல்லிவிட்டு சென்றுவிட வேண்டும். ஒரு அழுத்தத்தை உருவாக்க கூடாது. அவர்களாக சொல்லும்வரை சொந்த பந்தங்கள் நட்பு பெருசுகள் பிள்ளைகளை எதுவும் கேட்காமல் இருப்பதே நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி.

இத்தோடு இதை விட்டுவிடாமல் தொடர்ந்து இந்த பிரச்சனையை விவாதத்திற்கு உள்ளாக்கி அரசிற்கு தொடர் அழுத்தம் கொடுத்துக் கொண்டே வரவேண்டும். மறுபுறம் பிள்ளைகளுக்கும் ஏன் பெற்றோர்களுக்குமே கூட பயிற்சி தேவை.

Palani Vadivel: எல்லா அரசு தேர்வுகளும் ஒரு சாரார்களுக்கு வசதியாக அமைக்கபடுகிறது. பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த அண்ணாமலை ஐ பி எஸ் எப்படி ஜ பி எஸ் பாஸ் பண்ணினார் என்று சந்தேகம் வருகிறது..அவர் கொடுக்கிற பேட்டிகளையெல்லாம் படிக்கும்போது.தகுதி இல்லாதவன் பெரிய பதவிக்கு போவான்.தகுதி இருப்பவன் தேர்வுகளில் தோற்பான். 

 A Kumar : தன் மரணக்குறிப்பைக்கூட தேர்வுக்குறிப்பு போலத் திருத்தமாக எழுதப் பழகிய செல்லமே உன்னையும் கொன்றவர்களானோம்! நம் குழந்தைகளைக் களைப்படையச் செய்யும்,நம் குழந்தைகளைக் குற்றவுணர்வு கொள்ளவைக்கும் ஒரு தேர்வுமுறையைத் தூக்கி எறிய நம்மால் முடியவில்லை....வெற்றுப் பெருமைகளால் காது புளிக்கிறது

.// ஏற்கனவே இருந்த தேர்வுமுறைகளில் கொஞ்சமாவது கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு இருந்தது. அதையும் பறித்து மருத்துவக் கல்வியை வெறும் நகரத்துப் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று மாற்றிவிட்டார்கள். “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்” - எங்கே? அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் ஒவ்வொரு தங்கங்களாய் இழந்துகொண்டிருக்கிறோம். இந்த சோ கால்டு மக்களாட்சி சாடிஸ்ட்டுகள் இன்னும் எத்தனை பிள்ளைக்கறி கேட்பார்களோ?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக