புதன், 23 செப்டம்பர், 2020

மக்கள் பாதை இயக்கம்! கொம்பு சீவி விடப்பட்ட அரைவேக்காட்டுத்தனம்

Kathir RS : · மக்கள் பாதை இயக்கத்தினர் உண்ணாநிலைப் போராட்டம் குறித்த வீடியோ ஒன்றை பார்த்தேன். உதயநிதி அவர்களை நேரில் சென்று


சந்தித்தது இந்த போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெளிச்சம். 

ஆனால் அதை அவர்கள் பயன் படுத்திக் கொண்டார்களா என்றால், நிச்சயமாக இல்லை. உணர்ச்சிகரமாக இருவர் பேசினார்கள்..ஆனால் வெறும் உணர்ச்சிகள் தீர்வை தந்துவிடுமா?      நீட்டை நிறுத்திவிடுமா? அப்படிப்பட்ட சூழல் இந்நாட்டில் இருக்கிறதா?        உண்மையில் அவர்களின் உணர்வுகளை மதித்து பார்க்கச்சென்ற உதயநிதியை அவர்கள் சரியாக கையாளவில்லை அல்லது நடத்தவில்லை என்றே சொல்லுவேன் 

 "நீங்க ரெண்டு கட்சியும்தான் மத்திய மாத்தி வர்றீங்க.. 50 வருசமா ஆள்றீங்க ஏன் உங்களால நீட்டை நிறுத்த முடியல" என உண்ணாநிலையில் உள்ளவர் நா வரளப் பேசுகிறார்.  ஒரு பக்கம் அவரது நிலை குறித்து கவலை இருந்தாலும் மறுபுறம் அவரது பக்குவமற்ற பேச்சு பெருங்கவலை தருகிறது.

திமுக ஆதரவாளன் என்ற நிலையில் இதைச்சொல்லவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக எத்தனை எத்தனை முன்னெடுப்புகள் போராட்டங்கள் வழக்குகளை நடத்தியிருக்கிறார்கள் திமுகவினர்.நீட்டை முதன் முதலாக கடுமையாக எதிர்த்தும் பேசியும் எழுதியும் வந்த்ததோடு முதன் முதலாக அனிதா மூலம் நீட்டை சட்ட ரீதியாக அதை அணுகியதும் திமுக தான் என்பதை யெல்லாம் புறந்தள்ளி,
திமுகவும் அதிமுகவும் ஒன்னு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பாதை என்ற பெயரில் அவர்கள் செய்தது அப்பட்டமான மைலேஜ் அரசியல் மட்டுமல்ல அரசியல் அறிவின்மைத்தனமும் கூட.
முதலில் அரசியல் என்பது ஒருபோதும் தனிமனிதர்கள் அல்ல..
அது ஒரு பெரும் மக்களின் தொகுப்பு.
ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் தூக்கி கவிழ்த்துவிடலாமென நினைப்பதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம்.
அது ஒரு போதும் எதார்த்தமாக முடியாது
போகிற போக்கில் நாம தனி நாடா போய்டுவோம் என்று சொல்கிறார் ஒரு பெண்.எத்தனை தொலைநோக்கு பேச்சு..!!
நீட் கொடூரமானது, பல உயர்களை எடுத்து விட்டது என்றுதானே உண்ணாநிலை போராட்டம் செய்கிறீர்கள்.
நீங்கள் பேசும் தனி நாடு என்ற சொல் எத்தனை பேரை கொடூரமாக கொல்லக் கூடும் தெரியுமா? நீங்கள் கேட்டவுடன் ரெஃபரண்டம் நடத்தி நாளைக்கே தனி நாடு கொடுத்து போ என்றா சொல்லப்போகிறார்கள்.
ஒரு
தூத்துக்குடி சம்பவத்துக்கே இன்னும் நம்மால் நீதி பெற முடியவில்லை..
ஒவ்வொரு மாவட்டத்திலும் கனரக வாகனங்கள் துப்பாக்கி மனிதர்களுடன் வந்திறங்கினால் தாங்க முடியுமா நம்மால்.
மக்கள் போராட்டங்களை மதிக்கும் காலமா இது.
மக்கள் போராட்டம் என்பது தனித்த அடையாளங்களுக்காகவும் அரசியலுக்காகவுமென சுருங்கி இப்போது அதை ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலையில் ஒரு மனிதர் ஜனநாயகத்தையும் மக்கள் உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்று அவர் பயன்ற அரசியல் பாடத்தின் படி உங்களை சந்திக்க வந்தால் அவரை இப்படித்தான் எதிர்கொள்வீர்களென்றால் உங்களை சந்திக்க இனி எடப்பாடி அல்லது மோடிதான் வர வேண்டும்.
என்பது என் தாழ்மையான கருத்து.
கதிர் ஆர் எஸ்
23/9/20   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக