புதன், 23 செப்டம்பர், 2020

தலித் இயக்கங்கள் ஆர் ராசாவுக்கு ஒரு அளவு கோல் மராத்திய தலித் பெண் அதிகாரிக்கு வேறொரு அளவு கோல் ..ஏன்?

LR Jagadheesan : · தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரான

ஆண்டிமுத்து ராஜா இந்திய டில்லி சுல்தானியத்தாலும் கட்சிகடந்து எல்லா ஹிந்திய அரசியல் கட்சிகள், நிறுவனங்களாலும் வகைதொகையின்றி வஞ்சகத்தோடு விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தபோது,  தமிழ்நாட்டு தலித்திய கட்சிகள்; அமைப்புகள்; அதிகாரிகள்; என்ஜிஓக்கள் மற்றும் அறிவுசீவிகளில் 99% பேர் ஆண்டிமுத்து ராஜாவுக்கு எதிராக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முழங்கிக்கொண்டிருந்தது மட்டுமல்ல, அமெரிக்காவில் வீட்டுப்பணிப்பெண்ணை கொத்தடிமையாய் வைத்திருந்ததாக குற்றம்சாட்டட்டு கைதான தேவ்யானி கோப்ரகடே என்கிற மராத்திய தலித் பெண் IFS அதிகாரிக்கு ஆதரவாக முழங்கோ முழங்கென்று முழங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது சமீபத்திய வரலாறு.  தமிழ்நாட்டு தலித்தியம் அடிப்படையில் ஒற்றை ஜாதி அடையாளமாக மட்டுமே கட்டமைக்கப்பட்ட அவலத்தைவிட பேரவலம் அது திராவிட வெறுப்பின்மீதும் திமுக மீதான அசூசையின் மீதுமே இன்றளவும் திட்டமிட்டவகையில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதனால் தான் திராவிடத்தின் மீது நம்பிக்கையும் திமுக மீது நேசமும் கொண்ட தலித்துகள் தலித்துகளே அல்ல என்று ஆனப்பெரிய தலித்தீய பேராசிரிய பெருந்தகைகள் தெளிவாக தீர்ப்பே எழுதுகிறார்கள்  எந்த கூச்சமோ குற்றவுணர்வோ இன்றி... 

 Sridharan Chakrapani மொழிப் பிரச்சினையை சாதிப்பிரச்னையாக மாற்றுவதில் கில்லாடிகள் இந்த நீலச்சங்கிகள்!

 Marimuthu Pandiyan : சார்,இப்ப புதுச கிளம்பிம்பிய பசாக கும்பலின் அடிவருடிகள் இவர்கள், அதற்காக தலித் இயக்ங்கள் சுயசாதிவெறி கும்பல் என்று குறிப்பிடுவது தவறு, நீலக்கொடி வைத்திருப்பவன் அனைவரும் ,ஒரு வேலை தலித் கும்பலாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அம்பேத்கர் வாதியாக முடியாது, 


ஏனெனில் பெரியாரிய தந்துவத்தோடு அம்பேத்கர் கருத்தியலை பார்ப்பவன் மட்டுமே நல்ல அம்பேத்கர் வாதியாக இருக்க முடியும், சுயலாபத்திற்காக மக்களை அடகு வைத்த பாஸ்வான்,அத்வலே மற்றும் திடிர் உயர்சாதியான கி.சாமி,சான் போன்றவர்களை கூறலாம், 

ஆனால் பெரியாய வழியில் நடைபோம்,எழுச்சிதமிழர் திருமா,தமிழ்புலிகள் நாகையர், திராவிட தமிழர் அமைப்பில் வெண்மணி போன்றவர்களை பற்றி தங்களை போன்ற பெரிய எழுத்தாளர்கள் எழுதுவது இல்லை,ஆனால் அவர்களை பற்றி விமர்சனங்கள் மட்டும் வரும்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக