சனி, 5 செப்டம்பர், 2020

நரிக்குறவர்களின் கல்வி கண் திறந்த கலைஞர் ! சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்

சுவேதா ஒரு பொறியியல் பட்டதாரி. நரிக்குறவர் சமூகத்தில் முதல் பொறியியல் பட்டதாரிப் பெண் இவரே

சுவேதா முதல் பட்டதாரி

Ksb Boobathi : .. 1972ல் வெளியான குறத்தி மகன் திரைப்படம் பெறு

ம் வெற்றி பெற்றது... அது சமயம் அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனை கற்பகம் ஸ்டூடியோவில் நரிக்குறவர் இன மக்கள் கூட்டமாக வந்து சந்தித்தனர் அப்போது. சாமீய்... உங்க படத்துல படிச்சா தான் முன்னுக்கு வரமுடியும்னு சொன்னீங்க ஒங்க படத்தை பார்த்த பிறகுதான் படிப்போட அருமை பெருமை எங்களுக்கு புரிஞ்சது....
எங்க புள்ளைங்களாம் படிக்க நீங்களே ஒரு பள்ளிக்கூடம் கட்டி குடுங்க சாமீய்"னு அவங்க பேசி முடிக்க
இயக்குனரான அவர், பள்ளிக்கூடம்லாம் தனி மனிதரால சாத்தியப்படாது ஒருவேளை தொடங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது
நிறைய சட்ட திட்டங்கள் இருக்குன்னு அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த மக்களும் விடுவதாக தெரியல

என்ன சாமி நீங்க...... நாங்களாம் படிச்சி வாழ்க்கைல முன்னேறனும்னு படம் எடுத்து விட்டுட்டு இப்ப எங்களை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னா எப்படின்னு அவர்களும் அழ......

நிலைமை ரசாபாசமானது,....
உடனே சுதாரித்துக்கொண்ட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணன் (காங்கிரஸ்காரர்) நீங்களாம் நேரா கிளம்பி கோபாலபுரம் போங்க அங்கதான் முதலமைச்சர் வீடு இருக்கு.    


நாங்களாம் குறத்தி மகன் படம் பார்த்தோம் அதுல வர்றா மாதிரி எங்க புள்ளைங்களை படிக்க வைக்க ஆசைப்படுறோம்னு முதலமைச்சர் கிட்ட சொல்லுங்க (நான் தான் உங்களை அவர்கிட்ட அனுப்பி வெச்சேன்னு சொல்லிறாதீங்க) னு சொல்லி அனுப்பி வெச்சார்
விருகம்பாக்கத்திலிருந்த கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதல்வர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதல்வர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர். 


உதவியாளர்கள் மூலம் தகவலை அறிந்த முதல்வர் கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கையை தெரிந்து கொண்டார்......
இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காக ஒரு பள்ளி திறந்தால் அதில் நிறைய சட்டபிரச்சனைகள் வரும் அரசாங்கமே மக்களை பாகுபடுத்தி பார்க்கறதா ஒரு கருத்து உருவாகிடும் எனவே நீங்க ஏற்கனவே ஆங்காங்கு இருக்கற பள்ளிகள்லயே உங்க குழந்தைகளை சேர்க்கறது தான் சரி எந்த பிரச்சனையும் வராம நாங்க பார்த்துக்கறோம்னு அவர் சொல்ல

ஆனா அந்த மக்களோ சாமீய்.... எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை அங்க போய் மற்ற பிள்ளைகள் ஏதாவது கிண்டல் கேலி பேசினா அதைக்கேட்டு தாழ்வுமனப்பான்மையால் பள்ளிக்கூடம் போகமாட்டோம்னு சொல்லி எங்க புள்ளைங்க நின்னுருவாங்க இதிலெல்லாம் போய் பேசி சமாளிக்கற அளவுக்கு எங்களுக்கு அனுபவமும் அறிவும் இல்லை எங்க மக்களின் கல்வி கனவு, கனவாகவே போய்விடும் ஆகவே எங்க புள்ளைங்க மட்டுமே படிக்க தனி பள்ளி தான் வேண்டும் அதுதான் சரியான நிவாரணம் சமீய்,....னு அவர்களும் வாதம் செய்ய

கலைஞரும் அவங்க பேச்சில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு, சட்ட திட்ட பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கலாம்னு உதவியாளர்களிடம் சொல்லி அந்த இடத்திலேயே ஒரு உத்தரவு டைப் செய்து அதில் கையெழுத்து போட்டார் அந்த உத்தரவு தான் தமிழகத்தின் முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைகாரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972ல்) ட்ரஸ்ட் உறைவிட பள்ளி, அதன் அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்கு செலுத்த தேவையில்லை என்ற சிறப்பு சட்ட உத்தரவையும் அவரே போட்டார்

கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டிடடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே

அந்த குருகுல பள்ளியை முன்னோடியாக வைத்து 2001க்கு பிறகு செயலலிதா ஆட்சி காலத்தில் தஞ்சையில் இடம்பெயர்ந்து வாழும் இன மக்களுக்காக மேலும் ஒரு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டது.......

நரிக்குறவர்,காணிக்காரர்,குறும்பர் ஆகிய இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்க பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான்
அதை மத்திய அரசும் சமீபத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது........

(கலைஞானம் எழுதிய சினிமா சீக்ரெட் புத்தகத்திலிருந்தும், சிலரை விசாரித்தும் தெரிந்து கொண்ட தகவல்)

இங்க THIRUVALLUVAR GURUKULAM SAIDAPET னு முகநூல் ஐடி இருக்கு அதில் நானும் தேடித்தேடி பார்த்துட்டேன் அந்த பள்ளிக்கு காரணமான கலைஞர் பற்றி ஒரு வரி, வார்த்தை கூட அந்த ஐ.டியில் இல்லை ஆனா அந்த பள்ளி சிறப்பா இயங்கி வருது......

இது தான் இங்க உள்ள டிசைன்.....!

Kathiravan Soundhararajan

Ksb Boobathi

  

/vijayabharatham.or :சுவேதா பற்றித் தெரியவரும் எவரும் ஆச்சர்யப் படுவது இயல்பே. அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. அதிலென்ன ஆச்சரியம்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்    சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தில் முதல் பொறியியல் பட்டதாரிப் பெண் இவரே.

சமீபத்தில் திருச்சி ஆட்சியரைச் சந்தித்து, தங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு திட்டத்தில் பணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தார் சுவேதா.

விஜயபாரதத்திற்காக பூமாகுமாரி எடுதத்த பேட்டியிலிருந்து

உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் பெயர் சுவேதா. வயது 22. நரிக்குறவர் சமுதாய பெண். தந்தை, தா, தம்பி, நான் என நால்வர் எங்கள் குடும்பத்தில்.

திருச்சி எம்.ஏ.எம். கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அண்ணா வளைவில் உள்ள ஜோசப் பள்ளி. பின்னர் 6 முதல் 12 வகுப்பு வரை பிலோமினாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில். ஆங்கில வழிக் கல்வி பயின்றேன்.

நீங்கள் பள்ளியில் படு சுட்டியா? மற்றவர்களுடன் உங்கள் பள்ளி, கல்லூரி நாட்கள் எப்படி இருந்தன? அரசின் உதவியிலேயே படித்தீர்களா?

அம்மா ஆசைப்பட்டார்; நான் படித்தேன். நானும் நல்ல உழைப்பாளி. தனியார் பள்ளிகளில் உரிய பணம் செலுத்தி, விடுதியில் தங்கி படிக்க நேர்ந்தது. நான் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாமல் போய்விட்டதால், என் அம்மாவின் விருப்பம் போல டாக்டராக முடியவில்லை. பிரபலமாக இருந்த கணினி பொறியியல் பாடம் எடுத்தேன். கணக்கு எனக்கு ரொம்ப கஷ்டம்.

கல்லூரி, பள்ளி கட்டணங்களை பிரச்சினை இன்றி உங்கள் குடும்பத்தால் கல்விக் கட்டணம் கட்ட முடிந்ததா?

கஷ்டப்பட்டுத்தான் பள்ளிக் கட்டணம் கட்டிப் படிக்க வைத்தனர். என் அம்மா கூடுதல் வருமானத்திற்காக, மணி வேலை செவார்கள். மற்றவர்களின் மணியையும் வாங்கிப் போ மொத்தமாகக் கடையில் போடுவார்கள். ஒவ்வொரு மணி மாலைக்கும் மணிகோர்ப்பவர்க்கு ரூ. 5/-ம் என் அம்மாவிற்கு ரூ. 5/- நிற்கும். அப்படித்தான் காசு சேர்க்க வேண்டியிருந்தது. என் அப்பா மகேந்திரன் அவர்களும் எங்கள் நரிக்குறவ சமூகத்தவரின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர். என் பெற்றோர், உன்னால் முடியும், நீ சாதித்துக் காட்டுவா என நம்பிக்கை தருவார்கள். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவராக இருந்த அண்ணாமலை ஐஅகு அவர்கள் எங்களுக்கு பேருதவியாக இருந்தார். 2ம் வருடத்தில் கட்டணம் கட்ட முடியவில்லை. சலுகை கேட்கலாமா என என் அம்மா கூட கேட்டார். அப்படியான சூழல் இல்லை. எனவே, நாம் தான் எப்படியாவது கட்ட வேண்டும் என்றேன். அண்ணாமலை ஐயா, 1லீ லட்சம் ரூபாயை ஐஅகு சங்கத்தில் பேசி, உடனே கட்டண பாக்கியை இல்லாமல் செதார். அடுத்த இரண்டு வருடங்களும் அந்த சங்கமே ஐயா புண்ணியத்தில் கட்டணத்தைக் கட்டியது.

அரசு கூட உதவி செயாத சூழலில், நமது சமுதாயம் உங்களைக் கைவிடவில்லை என்பது திருப்தியாக உள்ளது. அது என்ன, நரிக்குறவர் ஆக இருந்து கொண்டு குஇ/குகூ ஆணையரைப் பார்க்காமல்…

நரிக்குறவர்கள் தாழ்த்தப்பட்ட, மலைஜாதியினர் பட்டியலில் (குஇ/குகூ) இல்லை; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் உள்ளனர். என் பெற்றோர், நரிக்குறவர்களை குகூயில் சேர்க்க பாடுபடுகிறார்கள். நரிக்குறவர் கல்வி, நலவாழ்வு சொஸைட்டி எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்துகிறார்கள். அம்மா நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளார்./vijayabharatham.or

சரி, படித்து வேலை கிடைத்ததா?

ஆம், கேம்பஸ் தேர்வில் சண்டிகரில் கிடைத்தது. அம்மாவிற்கு அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை.

திருச்சி கலெக்டரைப் போ பார்த்தீர்களே?

ஆமாம், எங்களுக்கே கீகு மலையப்பன் மாணவர் இல்லம் என்றொரு விடுதியும் 5ம் வகுப்பு வரை பள்ளியும் இருக்கிறது. அங்கே சத்துணவு கூடத்தில் வேலை செதவர் ஓவு பெற்றார். அந்த காலி இடத்திற்கு நாமும் விண்ணப்பிக்கலாம் என்றிருந்தேன்.

ஏன் அப்படித் தோன்றிற்று?

முன்பெல்லாம் எங்கள் சமூக மக்கள் திடகாத்திரமாக, முரட்டு ஆட்களாக இருந்தனர். இப்போது எங்களின் உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டது. ஊட்டச் சத்து, குறிப்பாக இரும்புச் சத்து தேவையான அளவில் எங்கள் கிடைப்பதில்லை. ஆரோக்கியம் இருந்தால் தானே சிறந்த மனிதர்களாக ஆக முடியும்? எங்கள் சமூக குழந்தைகள் ரத்த சோகை இல்லாத குழந்தைகள் ஆக வேண்டும் என்பதே என் ஆசை.

வேறு யாராவது பணிக்கு வந்தால் சுமார் 2 மணி நேர வேலைக்குப் பின்னர் வீடு செல்வர். நான் என்றால் முழுநாளும் எங்கள் சமூக குழந்தைகளுடனேயே இருந்து வழி நடத்தலாமே என்று தோன்றியது. மற்றபடி, இப்போதும் சென்னையில் ஒரு வேலைவாப்பு வந்துள்ளது. பார்ப்போம்…

அவர் இன்னும் முடிவு செது விட்டதாகத் தெரியவில்லை. பி.இ. (இணிட்ணீதணாஞுணூ குஞிடிஞுணஞிஞு) படித்து முடித்துள்ள, நரிக்குறவர் சமூக முதல் பொறியியல் பட்டதாரி மேலும் சவாலான விஷயங்களை நோக்கி நகர்தல் அவருக்கு மட்டுமல்ல, அவர் சமூக மக்களுக்கே ஒரு எழுச்சி உதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறா?

ரிக்குறவ சமூகத்தினரை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாடோடிகள், பழங்குடிகள்…? அதெல்லாம் பழங்கதை என்கிறார்கள் அந்த சமூக இளந்தலைமுறையினர்.

** ஆனந்த் என்ற இளைஞர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தொழில் தொடங்க நிதிகேட்டு மனு செத செதி வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கியை அணுகியிருக்கிறார். அவர்கள் கலெக்டரை கேட்கச் சோல்லியிருக்கிறார்கள். .அரசு இயந்திரத்துடன் மல்லுக்கட்டி காரியம் சாதித்துக் கொள்ளும் புதுயுக தொழில்முனைவோராக அந்த சமூக இளைஞர்கள் தெரிகிறார்கள்.

** அந்த சமூகத்தின் குடும்பங்களும் நடப்பு நிலவரம் நன்கு புரிந்துகொண்டு சமுதாயத்தின் மதிப்புப் பெறும் காட்சியும் தெரிகிறது. அந்த சமூக இளைஞர் சரவணன் சாலை விபத்தில் உயிரிழந்ததும் அவரது பெற்றோர் அவரது உறுப்புக்களை மற்றவர்களுக்குப் பொருத்துவதற்காக தானம் செதிருக்கிறார்கள் என்ற செதி எத்தனை பேருக்குத் தெரியும்?

** நரிக்குறவ சமூகத்தினர் வங்கியில் கடன் வாங்கினல் தவணை தவறாமல் திருப்பிச் செலுத்துவார்கள். நடையா நடந்தே செகந்திராபாத் வரை போனாலும் தவணைத் தொகையை தபாலில் அனுப்பத் தவறமாட்டார்கள்.” இது சி.கே கரியாலி என்ற அரசு அதிகாரி பல ஆண்டுகளுக்கு முன் செதியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட தகவல்.

** சமூக சேவையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் திருச்சி ஸ்வேதா குடும்பத்தை மறக்க முடியுமா?

சுவேதா தனக்கு பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, எல்லா பின்னணிகள் சார்ந்தவர்களின் நட்பும் கிடைத்துள்ளதாகச் சோன்னார். நட்பே பெரிய சப்போர்ட், ஆதரவு, ஊக்கி என அவர் சோன்னது உண்மை என்றே பட்டது. விடுதியிலும் வகுப்பறையிலும் வித்தியாசம் பாராட்டவில்லை என உறுதியாகச் சோல்லும் அளவிற்கு நமது சமூகம் மிகச் சரியாக விஷயத்தைக் கையாண்டுள்ளது.

அஸ்ரீன், முகில், ஷோபனா, புவனா, ரோஸ், பிரியங்கா, பத்மா, காயத்ரி, பிரதீபா, செல்வா வின்ஸி, அனிதா, நந்தினி, ஷர்லி என்று தன் பெரிய நட்பு வட்டத்தை அறிமுகம் செதார். பிராமணர், முஸ்லிம், கிறிஸ்தவர், ஏனைய பிரிவினர் என கதம்பமாக இருந்ததை மனம் குறித்துக் கொள்ளத் தவறவில்லை. தனது தோழியர்களின் பட்டியலில் சீனியர்களான கௌசல்யா, பவித்ராவை மறக்காமல் சேர்க்கும்படி சோன்னார்.ஜோஷிதா தேன்மொழி என்ற தோழி இவரைப் பாடச் சோல்லிக் கேட்பாராம். மனதிற்கு அந்த அன்யோன்யம் இதமாக இருக்கிறது. குழந்தைகளிடம் பேதமில்லை; நாம் எல்லோரும் இந்தியர் என்றே உணர்கிறார்கள். டீவிக்களின் சப்தங்கள் வெத்து வேட்டுகளே!

 


உங்கள் மகள் பரத நாட்டியம் ஆடுவாராமே? எங்கே கற்றுக் கொண்டார்? எப்படி இது நிகழ்ந்தது? என்று கேட்டோம்

என் மகள் சிறு வயதிலிருந்தே பரதம் கற்றிருக்கிறாள். மேலகல்கண்டார் கோட்டை (திருச்சி) வரை நானே பேருந்தில் அழைத்துச் சென்று கூட்டி வருவேன். நானும் கூட பரதம் கற்றிருக்கிறேன். என் 4வது வயதில். 7, 8 வருஷங்கள் நிறைய நிகழ்ச்சிகள் செதிருக்கிறேன். தீவுத் திடல் கண்காட்சியில் என் நடனம் பலமுறை அரங்கேறி உள்ளது” என்றார். தா எட்டடி பாந்திருக்கிறார். மகள் பதினாறு அடி பாவது ஆச்சரியமா என்ன?

நமக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தொடர்ந்தார்.

சைதாப்பேட்டையில் ரகுபதி ஐயாவின் விடுதியில் தங்கி அவரின் திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளியில் தான் நான் பயின்றேன். எம்ஜிஆருடன் நான் இருக்கும் ஒரு ‘புகைப்படம்கூட பள்ளியில் உள்ளதாகச் சோன்னார்கள். படிப்பு நிறுத்தி, திருமணம் முடித்து, 10வது தொடர்ந்தேன். எனக்குள் கல்வி தணியாத தாகம். எங்கள் மலையப்பன் மாணவர் இல்லம் மூலம் குறைந்தது 2,000 எங்கள் நரிக்குறவர் சமூகப் பிள்ளைகள் உட்பட பலர் படித்து, தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள்.

என் பையனை ஈரோட்டில் குகீஙயில் படிக்க வைத்தேன். ஜமால் மொஹமது கல்லூயில் ஆஇஅ 2ம் வருஷம் படிக்கிறான். பெயர் அருண் குமார். பாட்டு கற்றுக்கொள்கிறான். மிக இனிமையாகப் பாடுவான்” என்றார் பெருமையாக!

உங்கள் மொழி? என்றதும்

நரிக்குறவர் தாய் மொழி – ஹிந்தியும் குஜராத்தியும் கலந்த – ‘வாஹிரி போலி’ என்றார்.

‘மதம்மாற மறுத்தோம்’

உங்கள் மூதாதையர் பற்றி எனக் கேட்டதற்கு, எங்கள் முன்னோர்கள் ‘புலி வேட்டை’க்குச் சென்றவர்களாம் என்றார். இஸ்லாமிய ராஜாக்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டபோது, ‘எதற்காகவும் மதம் மாறுவதில்லை’ என்று சத்தியத்தோடு காடுகளுக்குள் சிதறி ஓடி, பல மாநிலங்களில் வாழத் தொடங்கி உள்ளனர். இன்றும் நாங்கள் பல ஊர்களில் சென்று வாழ்ந்து வருகிறோம் என்றார்.

திடீரென நினைவுக்கு வந்தவரா நானும் மகளும் பரதநாட்டியம் ஆடுவோம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

‘பஞ்சாமிர்தம்’ என ஆரம்பித்தேன். மகாதேவன் சாரா? எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. 2008ல் என் நடனத்தில் பாவமும் ரஸமும் என் ஆசிரியை கண்மணி மாஸ்டரையே அசத்திற்று என எழுதியிருந்தாரே?” என்று கூறி அதை நினைவு கூர்ந்தார். என்னை ஒரு ஆளாக மதித்து நீங்கள் தொடர்பு கொண்டு பாராட்டுவது என்னை ஊக்கப்படுத்துகிறது. மகாதேவன் சாருக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள்” என்று வாஞ்சையுடன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக