புதன், 9 செப்டம்பர், 2020
திமுக-வில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?
மாலையாமலர் : திமுக-வில் ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக-வில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?
பொன்முடி, ஆ. ராசா
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் என மூன்று பேர் துணை பொதுச்செயலாளராக உள்ளனர். திமுக கட்சி விதியின்படி 3 பேர்தான் துணைப் பொதுச்செயலாளராக இருக்க முடியும்.
தற்போது ஆ. ராசா, பொன்முடி ஆகியோருக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் மூன்று பேர் என்ற விதியை ஐந்து பேர் என மாற்றியமைக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக