புதன், 9 செப்டம்பர், 2020

சீமான் பேட்டி : கல்யாண சுந்தரமும் ராஜீவ்காந்தியும் நயவஞ்சகர்கள்,சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள்.

கல்யாண சுந்தரமும் ராஜீவ்காந்தியும் நயவஞ்சகர்கள்,சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள். இருவரும் என் தோளில் ஏறி என் வாயில் மூத்திரம் அடித்து விட்டார்கள் tamil.samayam.com  : நாம் தமிழர் கட்சிக்குள் நீடித்து வரும் குழப்பங்கள் குறித்து பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் உயிரிழந்தால்தான் கட்சியை உடைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் சீமான் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் அண்மை காலங்களாக அளித்து வரும் பேட்டிகள் பேசுபொருளாகி உள்ளது. குறிப்பாக அக்கட்சிக்குள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

 கல்யாண சுந்தரத்தை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.       ஆனால், இதுகுறித்து சமயம் தமிழுக்கு அளித்த நேர்காணலில் அந்த தகவல்களுக்கு கல்யாண சுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார்.      “கருத்து வேறுபாட்டால் இந்த கட்சியில் இருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். யார் சென்றாலும் கட்சி இருக்கும். தனி மனிதர்களால் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. 

ஆனாலும், தனி மனிதர்களின் ஆற்றல்களை கட்டமைப்பாக உருவாக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேசமயம், கல்யாண சுந்தரத்தின் பல்வேறு பேட்டிகளால் சீமான் அதிருப்தியில் இருப்பதாகவும், கல்யாண சுந்தரம் எவ்வளவோ முயற்சித்தும் அவருடன் பேசுவதையே சீமான் நிறுத்தி விட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தனியார் யூ-டியூப் சேனை ஒன்றுக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், “குற்றச்சாட்டு இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. 

கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி போன்றவர்களை சொந்த பிள்ளைகள் போன்றுதான் தட்டிக் கொடுத்து வளர்த்தோம். மேடைகளில் பேச, பேச, ஊடக வெளிச்சம் கிடைத்ததும், தான் பெரிய தலைவர் போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு வருகிறது. கல்யாண சுந்தரம் கட்சியில் 10 ஆண்டுகளாக இருக்கிறார். ஆனால், அவரை போன்ற ஆட்கள் கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார்கள். இதனை நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறார். எவ்வளவு சொல்லியும் அவர்கள் அதனை திருத்திக் கொள்ளவில்லை” என்று சாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக