செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பட்டியல் அருந்ததியர் உள் ஒதுக்கீடு ! நவ துவாரங்களையும் அடைத்துக் கொண்டது இந்துத்துவ தமிழ் தேசிய அரசியல்.!

 பட்டியல் அருந்ததியர் உள் ஒதுக்கீடு.     .வலுவாக மக்களிடம் சேர்த்தது ஆதித்தமிழர் பேரவை.!     தமிழகம் தலையில் வைத்து கொண்டாடும் தருணம்..!!  நவ துவாரங்களையும் அடைத்துக் கொண்டது இந்துத்துவ ஆன்மீகமும், தமிழ் தேசிய அரசியலும்.!!!    "பெற்றவருக்குத்தான் தெரியும் பிரசவத்தின் வலி"   பெரு.தலித்ராஜா..   இளைஞரணி.மாநில செயலாளர் : .

"உள்ளிட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது" என்று அறிவித்து தமிழகம் சமூகநீதியின் மண் என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்ச நீதி மன்றத்தின் நீதியரசர் அருண் மிஸ்ரா தலைமையிலான ஐவர் குழு கொண்ட அரசியல் சாசன அமர்வு.  ஆந்திரா பஞ்சாப் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் SC,BC பிரிவிற்க்குள் உள்ள இட ஒதுக்கீட்டின் பலன் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்று கருதி மக்கள் தொகையை கணக்கிட்டு சமமாக பிரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

ஆதித்தமிழர் பேரவை உழைப்பு.   தமிழகத்தில் அருந்ததியர் மக்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு
"பட்டியல் பிரிவில் பெரும்பான்மையாக வாழும் நாங்கள் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் ஆகிய தளங்களில் மிகவும் ஒடுக்கப்படுகிறோம்,
புறக்கணிக்கப்படுகிறோம்" என்று கூறி அரசுக்கு இட ஒதுக்கீட்டு கோரிக்கை முன்மொழியப்பட்டது.  


அதனடிப்படையில் பல்வேறு இயக்கங்கள் குரல் எழுப்பி இருந்தாலும் சாதி ஒழிப்பு களத்தில் சமூக நீதி (அருந்ததியர் இட ஒதுக்கீடு) ஒரு கூறாக இருக்கும் என்பதை அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் வழி சிந்தனைக் கொள்கைகளோடு தொடங்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை எனும் பேரமைப்பு அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை தீவிரமாகவும் முதன்மையாகவும் மேற்கொண்டது. அதற்க்காக கடந்த 25 ஆண்டுகளாக கருத்தரங்கம், பயிலரங்கம், ஆர்ப்பாட்டம், போராட்டம்,மாநாட்டுத் தீர்மானங்கள் அறிக்கைகள் லட்சக் கணக்கான துண்டறிக்கைகள் என சனநாயக அறவழியில் போராடி இடஒதுக்கீட்டை மக்கள் அரசியல் எழுச்சியாக உருப்பெற வைத்தது.

#கம்யூனிஸ்ட்_இயக்கங்களின்_பங்கு

அருந்ததியர் இயக்கங்கள், சங்கங்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் இந்த கோரிக்கையை கவனித்த தீண்டாமை ஒழிப்பு முன்னனி தாங்களாகவே களஆய்வு மூலமும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2006 விருதுநகரில் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ல் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மிகப் பெரும் மாநாட்டை நடத்தியது அதன் தொடர்ச்சியாக 2007 ஜீன் 12 ல் தோழர் வரதராசன் அவர்கள் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை மற்றும் பெரும்பான்மையான அருந்ததியர் இயக்கங்களும் சென்னையில் சுமார் லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அருந்ததியர் மக்களை ஒன்று திரட்டி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டுக்கான அப்பேரணியின் நோக்கத்தை உணர்ந்த அப்போதைய முதல்வரும் சமூகநீதி என்கிற சிந்தனை கொண்ட திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பேரணியில் கலந்து கொண்ட தலைவர்களின் கோரிக்கை மனுவை பெற்று கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டார்.

#திமுக_தலைவர்_கலைஞர்_அவர்களின்_சமூகநீதிப்_பார்வை

அந்த மனுவினை ஏற்ற கலைஞர் அவர்கள் சட்ட நுணுக்கங்களோடும் அரசியலமைப்பின் வழிகாட்டுதலோடும் செயலாற்றினார்
ஆளுனர் உரை, அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவை ஆலோசனை, நீதியரசர் பரிந்துரை என்பவைகளை பெற்று அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3% உள்ளிட ஒதுக்கீடு வழங்கி நவம்பர் 27'2008 ல் அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து 2009 ஏப்ரல் 29 ல் அருந்ததியர்களுக்கான உள்ளிட ஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வர காரணமாக அமைந்தது என்றால் அது திமுக தலைவர் கலைஞர் அவர்களையே சாரும்.

#சகோதர_சாதிகளின்_எதிர்ப்பு

பட்டியல் சமூகத்தில் அருந்ததியர்களின் சம எண்ணிக்கை கொண்ட தேவேந்திர குல வேளாளரும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கருப்பு நாள் என்று கூறி எழுந்து சென்றாரோ அன்றிலிருந்தே அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டுக்காக எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். கிருஷ்ணசாமி(பள்ளர்),
செகு தமிழரசன்(பறையர்) போன்றோர் தொடர்ந்த வழக்கின் எதிர் மனுதாரராகவும் அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் ஆதித்தமிழர் பேரவையின் தோழர் நீலவேந்தன்,
வழக்கறிஞர் ரஜினி மற்றும் பல்வேறு அருந்ததியர் இயக்கத் தலைவர்களும் மனுதாரராகவும் இணைத்துக் கொண்டனர்.

உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கு "தமிழக அரசு வழங்கிய உள்ளிட ஒதுக்கீடு செல்லும்" என்று கூறி வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

ஏற்கனவே ,ஆந்திரா ஹரியானா பஞ்சாப் என பிற மாநில BC,SC/ST இட ஒதுக்கீடு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எப்படியாவது தமிழகத்தில் வழங்கப்பட்ட அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட வேண்டும் என்ற முனைப்போடு உச்சநீதி மன்றத்திலும் வழக்கை தொடர்ந்தார் கிருஷ்ணசாமி மற்றும் பறையர் இயக்கங்கள்.

#வலு_சேர்த்த_போராளிகள்

ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தமிழக உயர்நீதி மன்றத்தில் பிரதிவாதியாக இருந்த போராளி நீலவேந்தன் அவர்கள் அருந்ததியர் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 விழுக்காடு போதாது என்று சமூக நீதி கோட்பாட்டை முழுதாக. உள்வாங்கிய போராளி நீலவேந்தன் தன் மக்களுக்கு 6% உள்ளிட ஒதுக்கீடு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் 2013 ல் அவர் தன் உயிர் கொடுத்து உள் ஒதுக்கீட்டை பாதுகாக்கும் தியாகச் சுடரானார் அதே ஆண்டில் தோழர் திருச்சி இராணி அவர்களும் இட ஒதுக்கீட்டுக்காக மறைந்தார் பின்னாளில் அதே கோரிக்கைக்காக தோழர் மகேஷ்வரன் அவர்களும் உயிர் நீத்து இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்கு மறைந்தும் வலுவாக்கினர் என்றால் யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

#உச்சநீதிமன்றத்தில்_ஆதித்தமிழர்_பேரவை_அய்யா_அதியமான்_மனு

அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்க்காக சென்ற சகோதர சாதிகளுக்கு எதிராக அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கத்திற்க்காக ஆதித்தமிழர் பேரவை அய்யா அதியமான் அவர்கள்
இடதுசாரி சிந்தனையாளரும் உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் தோழர் காலின் கன்சோல் அவர்களை நியமித்து 2014 ல் பிரதிவாதியாக இணைத்துக் கொண்டு வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போதுள்ள முதல்வர் எடப்பாடியின் தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞரைக் கூட நியமிக்காத ஒரு அபாய சூழலில் தலையின் மேல் தொங்கும் கத்தியாக உள்ளிட ஒதுக்கீடு வழக்கு இருந்துள்ளதை ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுட்டிக்காட்டிய பின்பு தமிழக அரசு வழக்கறிஞரை நியமித்தது.

இந்தாண்டு தொடக்கத்தில் உள்ளிட ஒதுக்கீட்டின் வழக்கு ஐந்து பேர் கொண்ட அமர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் உணர்ந்த அய்யா அதியமான் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லிக்குச் சென்று மூத்த வழக்கறிஞர் காலின் அவர்களை சந்தித்து வழக்கு குறித்து சட்ட நுணுக்கங்களை அறிந்ததோடு கூடுதலாக பேரவை சார்பிலும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதில் தலைவர் கலைஞர் வழங்கிய அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து சமூக நீதிப் பார்வையை எடுத்துரைத்த பின் இடதுசாரி சிந்தனையாளரான மூத்த வழக்கறிஞர் காலின் கன்சோல் அவர்கள் எளிமையாக புரிந்து கொண்டு தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுக்கான நியாயங்களையும் சட்ட வழிகாட்டுதலையும் சமூக நீதி வாதங்களையும் முன்னிறுத்தி வலியுறுத்தி வந்தார்.

#மகத்தான_தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஜீலை மாதம் 15 ஆம் தேதி
தீர்ப்பை ஒத்தி வைத்த நேற்றைய முன் தினம் 27-8-2020 அன்று கூடிய நீதிபதிகள் அருண் மிஸ்ரா.
இந்திரா பானர்ஜி.
வினீத் சரண்.
MR ஷா.
அனிருத்தா போஸ் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு "சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தான் இட ஒதுக்கீட்டின் தத்துவம்,
பிற்ப்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்ப்படுத்தப் பட்டோருக்கு எப்படி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதோ அப்படித்தான் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கும் வழங்கப்பட்ட உள்ளிட ஒதுக்கீட்டை மாநில அரசு தொடர்ந்து வழக்குவதற்கு தடையில்லை" என்கிற சமூக நீதிக்கான அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள்.

#அருந்ததியர்_மக்கள்_மகிழ்ச்சி

உச்ச நீதி மன்றம் வழங்கிய இந்த மகத்தான தீர்ப்பை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அருந்ததியர் மக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
அசைக்க முடியாத நம்பிக்கையை அனைவரின் முகத்திலும் காண முடிந்தது.

இதில் ஆதித்தமிழர் பேரவையின் உழைப்பையும் மக்களோடு கரம் கோர்த்த மகிழ்ச்சி வெள்ளத்தையும் ஏற்க மனம் இயலாத சில தோழமை சுற்றுக்கள் வழக்கம் போல் வசைபாடுவதும் விமர்சித்து பேரவைத் தோழர்களையும் அய்யா அதியமான் அவர்களின் உழைப்பையும் உயிர் நீத்த தோழர்களின் தியாகங்களையும் உதாசினப்படுத்தி சீண்டுவதைப் பார்த்தால் நகைப்புத்தான் ஏற்ப்படுகிறது.

#வாய்மூடியது_இந்து_ஆன்மீகம்_தமிழ்_தேசியம்

இந்த உள்ளிட ஒதுக்கீடு குறித்து வாயில் அவுல் மெண்டு கொண்டிருக்கும் இந்து ஆன்மீக அரசியலும் தமிழ் தேசியமும் இப்படியே இருந்து கொள்ளுங்கள் அப்போது தான் உங்களுக்கு நல்லது இந்து என்றும்,
தமிழ் உறவே என்றும் அழைத்து வாயில் வடை சுட நினைத்தால் "வீக்கம்" வாங்கிக் கொள்வது நிச்சயம்.

இந்துப் பார்ப்பனியம் மொத்தமாக இட ஒதுக்கீட்டை காலி செய்வது தான் நோக்கம் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ளாமலில்லை எழுவர் குழு அல்ல,
ஒன்பது பேர் குழு அல்ல,
12 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வே அமர்ந்தாலும்
அம்பேத்கர் பெரியார் வழியே வந்த திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்ப்பாட்டை தகர்க்க இயலாது என்பதைப் போல மக்கள் விகிதாசாரப்படி அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டு 6% பெறுவதே ஆதித்தமிழர் பேரவையின் லட்சியமாக அமைத்துக்காட்டும்.!!

- ஆதித்தமிழர் பேரவை
29-8-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக