புதன், 16 செப்டம்பர், 2020

நீட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாக இருந்தவர்கள், இருப்பவர்கள்


Ravishankar Ayyakkannu Surya is not a victim. He needs to own responsibility as the founder of Agaram Foundation which propagated NEET as an elixir.

A Sivakumar : · சூர்யாவுடன் என்ன பஞ்சாயத்து? பஞ்சாயத்து நடிகர் சூர்யா என்ற தனி மனிதருடன் இல்லை. பஞ்சாயத்து அவரை வைத்து நடந்த நீட் ஆதரவு பிரச்சாரம் குறித்ததே. சூர்யா என்ற தனி மனிதர் நீட் தேர்வை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம். அது அவரின் சொந்த முடிவு. இன்றும் தமிழ்நாட்டில் பலரும் நீட் தேர்வை ஆதரிக்கவே செய்கிறார்கள். இன்று நடிகர் சூர்யா அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்...ஏற்கிறோம், வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்..   ஆனால்

1) 2017ல் இதே நடிகர் சூர்யாவின் புகழ் வெளிச்சத்தில் நீட் ஆதரவு புத்தகங்களை அச்சிட்டு தமிழ்நாடெங்கும் விநியோகித்தார்களே சிலர், அவர்கள் எல்லாம் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்களா?
2) இத்தனை மாணவ செல்வங்களின் உயிர்கள் போனதில் தங்களுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்களா?
3) தங்களுடைய அரசியலுக்கு சூர்யாவை பலியாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்களா? கேட்பார்களா?
இதையெல்லாம் ஏன் இன்று கேட்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழுவதும் இயல்பே.
இன்று இத்தனை கேள்விகளை எழுப்பக் காரணமே அந்த கூட்டம் இன்றளவும் நடிகர் சூர்யாவை சுற்றியே இருக்கிறது என்பது தான்.
இந்த கூட்டம் 2017ல் நீட் தேர்வை ஆதரித்தது. நடிகர் சூர்யாவை அதற்கு பயன்படுத்திக் கொண்டது. வரிசையாக பிணங்கள் விழுந்ததும் இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கிக்கொண்டது.
தமிழகம் தழுவிய நீட் தேர்வு எதிர்ப்பு என்றேனும் ஒரு நாள் நீட் தேர்வை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்கும்.
ஆனால் இவர்கள் தப்பித்துவிடுவதோடு அல்லாமல் சூர்யா என்ற தேரை தெருவுக்கு இழுத்து விட்டிருக்கிறார்கள் என்பதையே வசதியாக மறந்துவிடுவார்கள்.
நாளை இதே மத்திய அரசு MEET தேர்வு என ஒன்றை கொண்டு வரும். அதை இவர்கள் ஆதரிப்பார்கள். அதற்கு வேறு ஒரு நடிகரை பயன்படுத்தி வெளிச்சம் பெறுவார்கள். மக்கள் மாண்டதும் மறைந்துக் கொள்வார்கள்.
இங்கே தான் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் அரசியலில் அல்லாத தனி மனிதர்களுக்குமான வித்தியாசத்தை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
திமுகவாே, அதிமுகவாே, இதர கட்சிகளோ தங்கள் ஒவ்வொரு நிலைப்பாட்டுக்கும் மக்களிடம் தேர்தலுக்கு தேர்தல், தினத்துக்கு தினம் பதில் சொல்லியாக வேண்டும்.
அவர்களின் நிலைப்பாடு சரியென்றால் மக்கள் வாழ்த்தி வாக்குகளை வழங்கி ஆட்சியில் அமர்த்துவதும் தவறென்றால் தோல்வியை பரிசாக தருவதும் வாடிக்கை.
தோல்வியினால் பகிரங்கமாக தங்கள் நிலைப்பாட்டை இக்கட்சிகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு இவர்களுடன் சேர்ந்து நீட் தேர்வை ஆதரித்த விடுதலை சிறுத்தைகள் எம்பி. திரு.ரவிக்குமார் பகிரங்கமாக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கருத்துருவாக்கம் செய்பவர்கள், சமூகநல ஆர்வலர்கள் என்று பலப் பெயர்களில் உலாவரும் பலரும் தங்கள் வாய்க்கு வந்ததை உளறுவதும் அதனால் மக்களுக்கு பாதிப்பென்றதும் பதுங்கிக் கொள்வதும் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடக்கிறது.
♦ கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான நாமக்கல்லை சுற்றியிருக்கும் பள்ளி மாணவர்களை எல்லாம் பண்ணைக் கோழிகள் என்று கொங்கு மண்டல மைந்தனான சூர்யாவை வைத்தே சொன்னவர்கள் இந்த கணவான்கள்.
அதற்கு அவர்களின் பிரபலத்தன்மையாே, நடிகர், நடிகைகளின் பிரபலத் தன்மையாே பயன்படுகிறது. கடைசியில் பாதகம் என்னவாே மக்கள் தலையில் தான் விடிகிறது.
சூர்யாவை கேள்வி கேட்கலாமா? என்றெல்லாம் பதறாமல் சூர்யாவுக்கு பின்னிருக்கும் கல்யாணி, சந்துரு போன்ற நீட் ஆதரவாளர்களை நீங்களும் கேள்வி கேளுங்கள்.
எந்த தரவுகளின் அடிப்படையில் தமிழக கல்வி முறை தோல்வி அடைந்துவிட்டது என்றும் தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் கேவலமானது என்றும் எழுதி குவித்தார்கள் என்று கேளுங்கள்.
தேர்தல் பங்கேற்பே இல்லாத மக்களிடம் பதிலே சொல்ல அவசியமில்லாத தங்களுடைய Safe Game அரசியலுக்கு பிறரின் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தும் கயமைத்தனத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.
இந்திராவை, ராஜீவை, கலைஞரை, எம்ஜிஆரை, ஜெயலலிதாவை, ஸ்டாலினை, எடப்பாடியை நாம் கேள்வி கேட்டிருக்கிறோம்.
வெற்றிப்பெற வைத்திருக்கிறோம்
தோல்வியை பரிசளித்திருக்கிறோம்
ஒரு முறைக்கு இரு முறை சென்னையில் காலே வைக்க விடாமல் மோடியை ஐஐடி மூத்திர சந்தில் ஓடவிட்டிருக்கிறோம்.
இதில் யாருமே விதிவிலக்கல்ல.
அப்படியிருக்கையில் குறுக்கே புகுந்து உருளாமல் கேள்வி கேளுங்கள்.
விருப்பமில்லையா?
நீட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக தெருவுக்கு இழுக்கப்படுவதை வேடிக்கைப் பாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக