வியாழன், 24 செப்டம்பர், 2020

ஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் போதைப்பொருள் - பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்

maalaimalar :  ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன்

போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன் என பாலிவுட் நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தினர்- பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்
ஷெர்லின் சோப்ரா
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டு ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடலை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போதைப்பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகைகள், நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ராகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சிமோன் கம்பாட்டா உள்பட பலரிடம் விசாரணை நடத்த இருக்கிறது.

விசாரணை வளையத்திற்குள் ஷெர்லின் சோப்ராவும் உள்ளார். இவர் ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன். இதை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்க தயாராக இருக்கிறேன் என்ற பெரிய குண்டை போட்டுள்ளார்.
இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில் ‘‘நான் ஒருமுறை கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியை காண சென்றிருந்தேன். வீரர்களுக்கான பார்ட்டிக்குப்பிறகு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன்.

அங்கே சென்ற நான் பார்ட்டியில் சந்தோசமாக கலந்து கொண்டேன். எனினும், நான் சோர்ந்து விட்டதால், முகத்தை க்ளீன் செய்வதற்காக வாஷ்ரூம் சென்றேன். அங்கே என் கண் முன் பார்த்த காட்சி எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பெரும்பாலான நட்டசத்திரங்களின் மனைவிகள் பெண்களுக்கான வாஷ்ரூம் பகுதியில் கோகைன் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

நான் தவறான பாதைக்கு வந்துவிட்டதாக நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். பார்ட்டி முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்தது. அதன்பின் போதை பார்ட்டி நடந்திருக்கலாம். ஆண்களுக்கான பகுதிக்கு சென்றிருந்தால், அங்கேயும் என்னால் பார்த்திருக்க முடியும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக