வியாழன், 24 செப்டம்பர், 2020

வழக்கறிஞர் பா.மணியம்மை : திராவிடர் கழகம் என்பது “கொள்கை குடும்ப கட்சி தான்”

Maniammai Periyar : · தேதி : 23.09.2020 வணக்கம், 27.09.2020 நாளிட்ட ‘ஜூனியர் விகடன் இதழில் “உங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்?” எனும்

தலைப்பில் பெரியாரின் உண்மைத் தொண்டன் என்று வந்த கட்டுரையைப் படித்தேன். இப்படி ஒரு இதழ் இருப்பதை மக்கள் மறந்துபோய் பல நாட்கள் ஆகிவிட்டது, நாங்களும் இருக்கின்றோம் என இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக பல அரசியல் கட்சித் தலைவர்களை கடுமையாக சாடிவருதை அறிந்தோம்.
அதே பாணியில் திராவிடர் கழகத்தையும் அதன் ஒப்பற்ற தலைவரையும் சாடியுள்ளது. இந்த 87 வயதிலும் தலைவர் பெரியாரை இந்த்துத்துவ, பார்ப்பனீய சக்திகளால் தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் , மக்களின் ஈடு இணையற்ற தலைவராக பெரியாரை கொண்டு போய் சேர்த்துள்ளார் “தமிழர் தலைவர் , திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அந்த வயிற்றெறிச்சலை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதற்கு காரணமான தலைவரை கொச்சைப்படுத்த ஒடுக்கப்பட்ட மக்களின் திடீர் ஆதரவாளராக மாற்றிவிட்டது ஜூவி இதழ்.
இந்திய குடிஅரசு தலைவரானாலும் தீண்டத்தகாதவர் என்று கோவிலுக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டவர் தான் திரு. “இராம்நாத் கோவிந்த்” இது வட இந்திய கலாச்சாரம் அதே ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் பூரண சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்து அத்திவரதரை பார்க்க வைக்கின்றனரே! இது தான் தமிழ்நாட்டு பண்பாடு. இதைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? பூணூல் கூட்டத்திற்கு
இது தான் பெரியார் மண். தந்தை பெரியாருக்கு பின் இந்த கொள்கை விதைகளை விதைக்கும் ஆசிரியர் அவர்களை பார்த்தால் கோவம் தானே வரும்! 
ஆசிரியர் என்றால் வெறும் பள்ளிப்பாடத்தை சொல்லிக்கொடுப்பவர் அல்ல,சமூக நீதி பாடத்தை , இன உணர்வு பாடத்தை என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் , மகளிருக்கும் கற்றுக்கொடுத்து, களத்தில் இறங்கி வேலை செய்ய கற்றுக் கொடுத்த "தாய் சிறுத்தை" தான் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பெண் பட்டதாரி, முதல் திராவிடர் கழக உறுப்பினர், இயக்கத்தில் நான் இணைந்த போது என் வயது 19 . இன்றைக்கு என் குடும்பமே அரசியல் களத்தில் திராவிடர் முன்னேற்ற கழகமாக இருந்தாலும், கொள்கை களத்தில் ஆசிரியர் கி.வீரமணி அய்யாவின் விடுதலை அறிக்கையே எங்களின் “உரிமை சாசனம்”
தந்தை பெரியாரின் சொத்து என்பது பணம், பதவி, கட்டிடங்கள் அல்ல. பெரியாரின் சொத்து என்பது “சமூக நீதி” பெரியாரின் சொத்துக்களாகிய சமூக நீதியை அனைத்து மக்களும் தமிழ்நாட்டில் பயன் அடைந்துள்ளோம். தந்தை பெரியார் இறப்பதற்க்கு முன் இட ஒதுக்கீடு 49% , தந்தை பெரியாருக்குப்பின் 69% இட ஒதுக்கீடு இந்திய துணைகண்டத்தில் வேறு எந்த மாநிலத்திலும் செய்து விட முடியாத சாதனை.
தாய்க்கழகம் திராவிடர் கழகம் செய்த இமாலய சாதனை. எங்கள் கொள்கைப் பிள்ளை திமுக மற்றும் அதிமுகவுடன் இருந்த போது செய்த சாதனை. பார்ப்பனர்களே பிரதமர் , குடியரசுத் தலைவர், முதல்வர் அம்மையார் ஜெயலலிதா என்று அனைவரிடத்திலும் வேலை வாங்கியவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
ஆண்டிற்கு பல நூறு கணக்கான ஜாதிமறுப்பு திருமணங்களை தலைமையேற்று நடத்தி வருபவர், இளைஞரணி தோழர்களுக்கும் இதையே முக்கிய முழக்கமாக வைக்கக்கூடியவர். மேலும் என்னை போன்றோர் ஜாதிமறுப்பு திருமணம் மட்டுமே செய்வோம் என்று களத்தில் நிற்கின்றோம்.
திராவிடர் கழக தலைவருக்கு நிதி கொடுப்பதில் , மக்களின் பங்கு மிக அதிகம் என்பதை நினைவூட்டுகின்றோம்.
திராவிடர் கழகம் என்பது “கொள்கை குடும்ப கட்சி தான்” தந்தை பெரியாரின் கொள்கை குடும்ப சொத்து தான் என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அறிவு நாணயத்தோடு இதையும் பதிவு செய்ய வேண்டும் உங்கள் ஜூவி யில் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
வழக்கறிஞர் பா.மணியம்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக