திங்கள், 14 செப்டம்பர், 2020

பெரியார் புத்தகங்களை அடித்து நொறுக்கி கொழுத்தி விடுங்கள்! ஒரு ஈழத்தமிழரின் அடாவடி

Kalai Selvi : யாழ் நூலகத்தை தீயிட்டு கொழுத்தியவர்களை இன்றுவரை வறுத்தெடுக்கும் யாழாதிக்கவாதிகளே அடிப்படையில் ஒரு நூலக


கொழுத்திகள்தான் என்பதை இவர் இன்று நிரூபித்து இருக்கிறார் 

 " உங்கள் வீடுகளில் யாரவது பெரியார் திராவிடம் பெண்ணியம் என்று பேசுவதையோ அல்லது நூல்களை வைத்திருப்பதையோ கண்டால் அடித்து நொறுக்கி கொழுத்தி விடுங்கள்" இப்படி பதிவிட்டு இருக்கிறார் இந்த ஈழத்தமிழர்.     அன்று நூலகத்தை எரித்தவர்களை சிங்கள காடையர்கள் இனவாதிகள் என்றெல்லாம் இன்றுவரை ஒப்பாரி வைக்கும் இவர்கள்இன்றே இப்படி கூறுகிறார்கள் அதுவும் பொதுவெளியில் பதிவிடுகிறாரக்ள் என்றால் இவர்கள் எவ்வளவு தூரம் காட்டுமிராண்டி உலகத்திற்கு பின்னோக்கி சென்றுவிட்டார்கள்???   இவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் நூல் நிலையங்களை எரித்தார்கள். அவர்களின் பள்ளிக்கூடங்களை கொளுத்தினார்கள் என்பதை எல்லாம் இப்போது நம்புகிறோம் . நிச்சயம் இவர்கள் அவற்றை கொளுத்தி இருப்பார்கள் என்பதற்கு இவரின் இந்த வாக்கு மூலமே ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகிறது.

புலிகள் பாலூற்றி வளர்த்தது இந்த ஜாதி பாசிசத்தைத்தைதான் என்பதற்கு இதை விட வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.     

இவர்களைத்தான் நெடுமாறன் முதலாக எல்லா தமிழ் தேசியவியாதிகளும் பெரியார் பெயரை கூவுவோரும் ஜூனியர் விகடனோடு சேர்ந்து உருவேற்றி விட்டார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக