திங்கள், 14 செப்டம்பர், 2020

விகடன் அறிவுரையால் மனம் திருந்திய பில் கேட்ஸ் ... நாட்டு மாடு கத்திரிக்காய் விவசாயம்...

Devi Somasundaram : அன்புள்ள விகடன்.. !   நீங்க பசுமை விகடன்ல எழுதும் கட்டுரைலாம் படிச்சு , பில் கேட்ஸ் தன் பிஸ்னஸ் விட கத்திரிக்காய் வளர்ப்பது லாபம் தரும் பிஸ்னஸ் என்பதை அறிந்து ,அவர் பிஸ்னஸ விட்டு செவத்தம்பட்டில 50 ஏக்கர் வாங்கலாம்னு விலை பேசறாராம் .
நானும் ஒரு ஏக்கருக்கு 2 லட்சத்து 62 ஆயிரம் லாபம் கிடைப்பதால் இத்தனை ஆண்டுகளாக விவசாயம் செய்த செவத்தம்பட்டி ஆட்கள் எல்லாரும் மல்ட்டி மில்லியனரா இருப்பார்கள்

,அவர்கள் மைக்ரோ சாப்ட வாங்கிக் கொள்வார்கள் என்ற ஆசையில் செவத்தம் பட்டி மல்ட்டி மில்லியனிரடம் விலை பேச போனேன்..
கம்மாய்ல கோவ்ணத்தோட குளிச்சுகிட்டு இருந்த கோவிந்தசாமி அய்யா ' விகடன்ல வருமானம் இல்லன்னு எல்லா புத்தகத்தையும் நிறுத்திட்டு இருக்கானுகளாமே? நிறைய பேர வேலை விட்டு வேற அனுப்பறானுகளாம் . பேசாம விகடன் ஆபிஸ இழுத்து பூட்டிட்டு செவத்தம் பட்டில நிலம் வாங்கி விவசாயம் பண்ண் வரச் சொல்லு ,     அதான் ஏக்கருக்கு 2 லட்சம் கிடைக்கிதுல்ல ,     அவன் எதுக்கு பத்திரிக்கை நடத்திட்டு , மூடிட்டு வந்து விவசாயம் பண்ணச் சொல்லுன்னு சொன்னார்...     நானும் நல்ல ஐடியா வா இருக்கேன்னு விகடன் ஆபிஸ மூட பூட்டு வாங்கிட்டேன்..   .எப்ப வரலாம்னு சொன்னிங்கன்னா பூட்டிட்டு கத்திரிக்காய் புடுங்க ச்சேய் .பறிக்க போகலாம்.....

  எப்பன்னு சொல்லி விடறிங்களா விகடனாரே.

Jeya Vasukhi என்னோட ஒரு friend Iceland க்கு tour போய்ட்டு வந்தான் .அங்க உள்ள வாழ்க்கை முறைய பத்தி கேட்கும் போது...this is what he said ஒவ்வொரு வீட்டுலயும் இரண்டு ஆடு, மாடு, கொஞ்சம் காய்கறிகள் . Minimalist life style. மக்கள் ரொம்ப happy ya...content taa இருக்காங்கன்னு அப்படி வாழ்றதுல என்ன தவறு ?

Devi Somasundaram ஐஸ்லந்த்ல சாதி இலலை, மதவெறி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை, சாதியால ஒரு சமூகத்துக்கு நிலவுடமையே இல்லை, இதை எல்லாம் ஒழிச்சுட்டு வாங்க ,.ஐஸ்லந்த் மாதிரி வாழ்வோம் ..வாய்ப்புன்றது எல்லாருக்குமானது ....135 கோடி மக்களுக்கும் இருக்க்ற நிலத்தை ஆளுக்கு ரெண்டு ஏக்கர்னு பிரிச்சு குடுத்துட்டு பேசனும் ...அதான நியாயம்...அத விட்டு ஐடி கம்பனி விட விவசாயம் லாபம்னு பொய் பேச கூடாதுல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக