வியாழன், 10 செப்டம்பர், 2020

உலகம் சுற்றுவதை கண்டுபிடித்த அய்யன் திருவள்ளுவர் .. காப்பர்னிக்கஸ்சுக்கே முன்..

Nnicolaus Copernicus .Born: February 19, 1473, Torun, Poland Died: May 24, 1543, Frombork, Poland

Sundar P : தமிழ் அறிவோம் - 3 : உலகம் சுழல்கிறது என்று யாரோ
கண்டுபிடித்தார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவன் சொன்ன வாசகம் இது. “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை." - ( குறள் எண் : 1031 )

இந்த உலகம் தன்னைத் தானே சுற்றி சுழன்றுகொண்டிருந்தாலும், உழவுத் தொழிலான விவசாயத்தின் பின்னால் நடந்து வருகிறது. எனவே உயிர்காக்கும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழில்.  (உழந்து – உடல்; உயிருக்கு ஆதாரமான பொருள்)

உலகம் உருண்டை என்பது மட்டுமல்ல, அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதனை பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்கு இன்னொரு குறள் ஆதாரமாக விளங்குகிறது...

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து…” - ( குறள் எண் : 1032 )

இதன் பொருள்: உழவுத்தொழிலை செய்பவர்தான் உலகத்துக்கு அச்சாணியைப் போன்றவர்கள்.  ஏனென்றால், வேறு தொழிலகளைச் செய்துகொண்டிருக்கும் மக்களையும் இவர்களே தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். என்பதே.

இங்கே அச்சாணி என்னும் சொல்லை வள்ளுவர் ஆண்டிருக்கிறார் என்பதை உற்று நோக்குங்கள்.   உலகம் ஒரு அச்சாணியில் சுழல்கிறது. அந்த அச்சாணி வேறு எதுவும் இல்லை; உழவுத்தொழில் செய்யும் உழவர்களே அந்த அச்சாணியைப் போன்றவர் என்றல்லவா வள்ளுவர் உரைக்கிறார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக