வியாழன், 17 செப்டம்பர், 2020

அமித் ஷா உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன?

Shankar A : · அமித் ஷா உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன?   கடந்த வாரம் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருவதையொட்டி, முழு உடல் தகுதி பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறப்பட்டது.

ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இரண்டு நாட்கள் ஆனபோதும், அவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக, மிக முக்கிய பிரமுகர்கள், மத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அவர்களின் உடல்நிலை தொடர்பான தகவலை அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும்.
ஆனால், அமித் ஷாவின் உடல்நிலை தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடமும் இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக புதன்கிழமை இரவுவரை செய்தியாளர்கள் வற்புறுத்தியபோதும், அது பற்றிய தகவல்களை வெளியிடாமல் அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள்.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை ஹிந்தி திவஸ் எனப்படும் ஹிந்தி மொழிகள் தினத்தையொட்டி அமித் ஷா காணொளியில் தோன்றிப்பேசும் பதிவு செய்யப்பட்ட காணொளியை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஹிந்தி மொழி தொடர்பாக அவர் வலியுறுத்திய சில கருத்துகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மொழி உரிமை சர்ச்சையை தூண்டியது. அந்த காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதையும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெளியிட மறுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக