திங்கள், 21 செப்டம்பர், 2020

படிக்க செல்போன் இல்லாததால் மாணவி தீமூட்டி தற்கொலை

INCIDENT IN ERODE

 nakkeeran :ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வேலுமணி என்பவரின் மகள் ஹேமாமாலினி பங்களாபுதூர் அரசுமேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளிகள் திறக்கபடாத நிலையில் ஆன்லைன் மற்றும் கல்வி சேனல்கள் மூலம் பாடம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஹேமாமாலினி வீட்டில் இருந்து கல்விதொலைக்காட்சி வழியாக பாடம் படித்துவந்துள்ளார். ஆனால் வீட்டில் உள்ள தொலைக்காட்சி கேபிளில் ஒளிபரப்பு குறைபாடு காரணமாக அந்த சேனல் சரிவர ஒளிபரப்பாகவில்லை. இதனால் மாணவி பாடம் படிக்க தனது பெற்றொரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பத்தாயிரம் பணம் கொடுத்து செல்போன் வாங்க அந்த குடும்பத்தால் முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் உறவினர் ஒருவர் பழைய செல்போன் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் அந்த செல் போன் சரியாக இயங்காத காரணத்தால் அதிலும் பாடம் படிக்கமுடியாத நிலையில் மனவேதனையடைந்த அந்த சிறுமி ஹேமாமாலினி 20 ந் தேதி அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிய பின் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணை உற்றி தீவைத்துக்கொண்டார்.



வீட்டில் புகை வருவதைகண்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சிறுமி ஹேமாமாலினி உடல் முழுதும் எரிந்தநிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த கொடூர வேதனைைையான சம்பவ அப்பகுதி ஒட்டுமொத்த மக்களைையும் பெரும் வேதனையடைய வைத்துள்ளது. 

இதைவிட கொடூரம் என்ன வென்றால் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த ஊரில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.  இதுகுறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐயகோ.... இந்த நிகழ்வை மனித மனம் எப்படி எதிர்கொள்ள இயலும்?    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக