வெள்ளி, 4 செப்டம்பர், 2020

திமுக வென்ற போதெல்லாம் தமிழகம் வென்றிருக்கிறது

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக திரு.துரைமுருகனும் , பொருளாளராக திரு. டி .ஆர் பாலுவும் தெரிவு செயப்பட்டிருக்கிறாரகள்.   

இருவரும் திமுகவோடு மிக நீண்டகாலமாக பயணித்து கொண்டிருப்பவர்கள் . 

திமுகவோடு பயணிப்பது என்பது ஒரு சுகமான சவாரி அல்ல!   அந்த சவாரியானது  கடும் சோதனைகள் நிரம்பியது.      திமுக ஆட்சியில் இருந்த காலத்தை விட எதிர்க்கட்சியாக இருந்த காலமே அதிகம் .       ஆனாலும்கூட  தமிழகத்தின் பிரமிக்கத்தக்க எழுச்சிகள் பெரிதும் திமுக ஆட்சி காலங்களில் ஏற்படடவை  என்பது திமுகவின் பெருமை சாதனையாகும்.      திமுகவின்  இந்த பாரம்பரிய பயணத்தில் தோளோடு தோளாக நின்ற திராவிட தளபதிகளான திரு துரைமுருகன் திரு பாலு போன்றோர் இன்று முக்கிய பதவிகளுக்கு தெரிவாகி உள்ளனர்.    இவர்களின் தெரிவானது ஏராளமான திமுக அபிமானிகளுக்கு ஒரு மகிழ்ச்சியையும் . ஏன் ஒரு நிம்மதியையும் கூட தந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.  

இவர்களின் கடந்த காலவரலாறு இவர்களின் இந்த தகுதிக்கு சான்றாக உள்ளது . திமுக படு மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது . இன்னும் சரியாக சொல்லப்போனால் பல நாசகார சக்திகளினால் குறி வைக்கப்பட்ட வரலாறு எல்லாம்கூட  உண்டு .

அவற்றில் இருந்து திமுகவை காப்பாற்றிய உதயசூரியனாம் கலைஞருக்கு உறுதுணையாக நின்றவர்களில் இவர்கள் இருவருக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.

கலைஞரின் உள்ளத்தை இவர்கள் அறிவார்கள் .இவர்களை கலைஞரும் அறிவார்.  

இவர்கள் இருவர் மீதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோடிக்கணக்கான  கலைஞர்களான தொண்டர்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பினை வழங்கி இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தின் ஏற்றத்திற்கும் திமுகவின் எழுச்சிக்கும் இவர்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வாழ்த்துகிறேன் 

திமுக வென்ற போதெல்லாம் தமிழகம் வென்றிருக்கிறது . திமுக தோற்ற போதெல்லாம் தமிழகம் தோற்று இருக்கிறது.  இதுதான் தமிழகத்தின் உண்மை வரலாறு.

தமிழகம் வெற்றி பெற திமுக வெற்றி பெறவேண்டும் . 

திமுகாவின் அனைத்து அபிமானிகளும் தங்களுக்குள் கலைஞரை உள்வாங்கி வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக