திங்கள், 7 செப்டம்பர், 2020

ஹிந்தியை புறந்தள்ளியதால் தமிழர்களின் கல்வி உலகத்தரத்தில் உள்ளது

Narain Rajagopalan: ஹிந்தி படிக்காமல் போனதால் தமிழ்நாடு இழந்தது என்ன ?

1 ) ஹிந்திக்கு பதிலாக இங்கிலிஷ் கற்று கொண்டதால், தமிழர்கள் அமெரிக்கா
விற்கும், ஐரோப்பாவிற்கும் போனார்கள். ஹிந்தி மட்டுமே தெரிந்து இருந்த குஜரா த்திகளும், சிந்திகளும், மார்வாரிகளும் ஆப்ரிக்காவிற்கு போனார்கள்.

2 ) ஹிந்தி கற்காமல் ஒழுங்காய் அந்த நேரத்தில் அறிவியலும், கணிதமும் ஓர ளவுக்கு பயின்றதால் தான் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவ கல்லூரிகளும் தமிழ்நாட்டில் உருவாயின. ஹிந்தியை கற்று கொண்டு அறிவியலிலும், கணித த்திலும் பெயிலான காரணத்தினால் தான் பஜ்ரங் தள்ளும், அனுமன் சேனா வும் உருவாயின.

3 ) ஆங்கிலம் சரிவர படிக்காமல், வெறும னே தமிழ் படித்த தமிழர்கள் கூட இன்றை க்கு எந்த உணவகங்களிலும் எச்சில் தட்டு கழுவ தயாராக இல்லை. ஹிந்தி யை 12 வருடங்கள் படித்த, அல்லது கோட் அடித்த ஏராளமான வடக்கத்தியர்கள் தான் அந்த வேலைகளை செய்கிறார்க ள். ஹிந்தி படிக்காமல் போனதால் “சுய மரியாதை” வியாதி பீடித்த தமிழர்கள் இந்த மாதிரியான வேலைகளை செய்வ து இல்லை.

4 ) ஹிந்தி மற்றும் ஹிந்தி உருவான
தேவநாகரி மொழி குடும்பத்தில் இயங் கும் மாநிலங்களிலிருந்து தான் அதிக மான படிப்பறிவில்லாத தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வேலை வருகிறார்கள். இந்த பாழாய் போன தமிழையும், அரை குறை ஆங்கிலத்தையும் படித்த ஏராள மான அரைகுறை படிப்பு படித்த தமிழர்
கள் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கு போய் விட்டார்கள்.

5 ) தன்னுடைய சொந்த மொழியை ஹிந்திக்காக அடகு வைத்த மாநிலங்கள் எல்லாமே கேள்வி கேட்காமல் ஒன்றியத் தின் குரலோடு ஒன்று படுகிறார்கள். ஆனால், இன உணர்வையும், மொழியு ணர்வையும் எந்த காரணத்தை கொண்டு விட்டு கொடுக்காத தமிழ்நாடும், தமிழர்க ளும் ஒன்றியத்தை முழுமையாக நிராக ரித்து,அதை எதிர்த்து கேள்வி கேட்கிறார் கள்.

ஆக இந்த மாதிரியான “கடுமையான பாதிப்புகளை” திராவிட அரசியல் கட்சி கள் ஹிந்தியை மறுத்ததன் மூலம் தமிழ் நாட்டில் உருவாக்கி இருக்கிறார்கள்
என்பதை நாம் மறுக்க முடியாது. ஆகவே ஹிந்தி படித்து நம் எதிர்கால தலை முறைகளை நாசமாக்குவோம் என்று கல்வெட்டு ரவி சார்ப்பாக சத்தியம் செய்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக