சனி, 12 செப்டம்பர், 2020

சுவாமி அக்னிவேஷ் மறைவு... மனித உரிமைப் போராளி

 Asiriyar K Veeramani :
சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு இரங்கல்!மனித உரிமைப் போராளியாகப் பல போராட்டங்களில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ் அவர்கள், இன்று (11-9-2020) மாலை டெல்லி மருத்துவமனையில் உடல் நலம் குன்றியதால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருக்கு வயது 80. பழங்குடி மக்களின் நில உரிமைக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் அவர்கள், பா.ஜ.க. ஆதரவாளர்களால் பலமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அவரை உடல்நலம் குன்றச் செய்தது. அதன் பின்பும் ஒரு முறை இப்படிப்பட்ட அவலம்! அதையெல்லாம் எதிர்கொண்ட அவர், தனது லட்சியப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். மனித உரிமைப் போரை மேற்கொண்ட காவித் துறவி அவர்!   வடபுலத்தில் நாம் கலந்து கொண்ட சமூகநீதி மாநாடுகளில் கூட அவர் கலந்து கொண்டதுண்டு.   அவருக்கு நமது வீர வணக்கம்!  - கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்  .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக