மருத்துவ படிப்பில் சேருவதற்காக
நடத்தப்படும், ‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்
கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய
அரசுக்கு அனுப்பப்பட்டது.<>அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு
பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு
வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற
நீதிபதி கலையரசன் தலைமையில் குழு கடந்த மார்ச் 21-ம் தேதி அமைக்கப்பட்டது.
அந்தக்குழு
அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட
ஒதுக்கீடு வழங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை
ஒப்புதல் அளித்தது. அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து தற்போது
சட்டப்பேரவையில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக