செவ்வாய், 15 செப்டம்பர், 2020

2ஜி சதியின்போது ஆ ராசாவை கைவிட்ட பலர் இன்று ராசா எங்க ராசா என்று .... ஜாதிப்பாசம்?

  K
aruppu Neelakandan
: சகோதரர் ஆ.ராசா இந்திய பார்ப்பன பொறுக்கி
ஊடகங்களாலும் அவர்தம் அல்லக்கைகளாலும் அவ்வளவு அநீதியான அவதூறுகளுக்கு உள்ளானபோது கலைஞரும், திராவிடர் கழகமும், திராவிடர் இயக்க தமிழர் பேரவையும்தான் அவரை ஆதரித்தது. அவரின் அவதூறு எதிரிகளை தங்களின் இனத்தின் எதிரிகளாய் நின்று சமூககளத்தில் எதிர்கொண்டது திராவிடர் இயக்கம் மட்டும்தான். அவர்களைத் தாண்டி ஆ.ராசா அவர்களை இங்கே ஆதரித்த ஒரே ஒரு அமைப்பு அம்பேத்கரிய-பெரியாரிய புரிதலோடு 25ஆண்டுகளாய் இதழியல் பிரச்சாரத்தை இந்து இழிமதத்ற்கெதிராக போராக தொடுத்துக்கொண்டுவரும் 'தலித்முரசு' இதழ் மட்டும்தான். 
ஆனால் கடந்த இரு வாரங்களாக 'ராசா' ' எங்க சின்ன ராசா 'எனும் ஜாதிப்பாசம் மிகுந்த குரல்கள் கொஞ்சம் போலியாகவும் தூக்கலாகவும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் இன்றைய சூழலிலும் தலித்துகளுக்குள்ளேயே ஒரு ஜாதியை மையங்கொண்டு இன்னொரு சகோதர ஜாதியை புறக்கணித்துக்கொண்டும், அவதூறுப்படுத்திக்கொண்டிருக்கும் ஜாதியை கூர்மைப்படுத்தும் கூர்மை வாய்ந்த குரல்கள் அவை. 
சாதாரண தொண்டர் நிலையிலிருந்தால் கூட அக்குரல்கள் எதிர்காலத்தில் அது தன்னை அம்பேத்கரியத்தில் கரைத்து சரிசெய்து கொள்ளும் என்கிற நம்பிக்கைகளோடு நாம் அவற்றை கடந்துவிடலாம். ஆனால் இப்போது இப்படியான சவடால்களை அடிப்பது அம்பேத்கர்,பெரியார்,மார்க்ஸ்,அயோத்திதாசர் என எல்லாவற்றையும் கரைத்துக்குடித்துவிட்டதாய் காட்டிக்கொள்ளும் ஜாதியுணர்வு கொண்ட இன்டெலக்சுவல் குரல்கள் .
உண்மையில் திமுகவிற்கு எதிராக பாஜகவைப் போலவே அவ்வளவு வன்மத்தை கொண்டிருக்கும் அந்தக் குரல்கள் அடிப்படையில் ஜாதியைத்தவிர எந்தவித விருப்பத்தையும் ஆ.ராசா மீது காட்டாத ஆபத்தான குரல்கள் அவை.! 
 
இப்படியான குரல்களின் தோற்றுவாயும் வேலைத்திட்டமுமே இந்துமத- பார்ப்பன- ஆர்எஸ்எஸ் -பாஜக வின் மூலபலம்தான் அதுதான் முருகனை இறக்கிவிட்டு வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறது. அதையே இந்தப் பக்கம் நின்று செய்துகொண்டிருக்க எல்லாவற்றையும் கரைத்துகுடித்துவிட்டு வயிறு வீங்கி நிற்கும் இன்டெலக்சுவல் எதற்கு?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக