ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு!

தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு! minnambalam : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கினார்கள். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.மின்னம்பலம் : ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்துள்ளார்.   எஸ்.நந்தகோபால், பி.மதன், சி.விஜயகுமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், ஜி.டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகிய 12 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்தத் தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) ஜூம் செயலி வழியே தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூடினார்கள். அப்போது தேர்தல் அதிகாரி விஜயகுமாரும் இருந்தார். அப்போது தலைவராக பாரதிராஜா, செயலாளராக டி.சிவா, இணைச் செயலாளர்களாக டி.தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், துணைத் தலைவர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர்களை எதிர்த்து வேறு யாரேனும் போட்டியிடுகிறீர்களா என்று தேர்தல் அதிகாரி கேட்டார். யாருமே முன்வரவில்லை என்பதால் இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வானார்கள். அதனைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு யாரெல்லாம் போட்டியிடுகிறீர்கள் என்று தேர்தல் அதிகாரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு நந்தகோபால், மதன், சி.வி.குமார், ராஜ்சேகர கற்பூரசுந்தரபாண்டியன், டில்லி பாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுதர்சன், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் விரும்புவதாகத் தெரிவித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வேறு யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காத காரணத்தால், இவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜூம் செயலி வழியே அனைத்து நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி விஜயகுமார் நிர்வாகிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவர்களுடைய நிர்வாகம் 2022ஆம் ஆண்டு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பணிகள், புதிய இணைய தளத்துடன் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் சினிமா பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து நூற்றாண்டு கொண்டாடி முடித்திருக்கிறது. இதற்கான முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 3 அன்று வெளியிடப்பட்டது. இந்த அமைப்புக்கு www.TFAPA.com எனும் பெயரில் இணையதளம் ஒன்று தொடங்கப் பட்டு, அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் தளத்தில் 1931 முதல் இன்று வரை வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள், அதன் தயாரிப்பாளர்கள், நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் படம் பற்றி இதர தகவல்களும் இடம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தங்களின் திரைப்படத்துக்குத் தலைப்புகளை, இந்த இணைய தளம் மூலம் நேரடியாகப் பதிவு செய்யும் வசதியை வெகு விரைவில் செய்ய இந்த சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த அமைப்பு மீண்டும் படப்பிடிப்புகளைத் தொடங்க நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்ததன் பலனாக, படப்பிடிப்பு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதை பின்பற்றி தமிழக அரசும் வெகு விரைவில் நின்று போயிருக்கும் பல படங்களின் ஷூட்டிங் தொடங்குவதற்கான அனுமதியை விரைவில் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சங்கம் உள்ளது. கொரானாவால் தடைபட்டுபோன படப்பிடிப்புகளை மீண்டும் நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் எனப் பிற உதவிகளையும் 'தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' மேற்கொள்ள இருக்கிறது

திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையில் வசூலிக்கப்படும் 8 சதவிகிதம் உள்ளூர் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட்டு இருக்கிறோம். வெகு விரைவில் அது நீக்கப்பட்டு, ஒரு நல்ல தீர்வு, தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கிய பின் இதுவரை 100 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இவற்றில் 50 பேர் வாக்குரிமை உள்ளவர்களும் மேலும் அசோசியேட், புரபசனல் தகுதி அடிப்படையில் 50 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 45 ஆண்டுகளாக வெற்றிகரமான படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களும் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்றைய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அலுவலகம் தயாராகி வருகிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக