செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

உதயநிதியின் பிள்ளையார் சிலை விவகாரம்

உதயநிதி+மகள் தன்மயா
உதயநிதியின் பிள்ளையார் சிலை விவகாரம் ஒரு விடயத்தை மிக தெளிவாக காட்டி இருக்கிறது. திமுகவில் என்னதான் அதிகார மையத்தில் இருப்பவராக இருந்தாலும் கடுமையான விமர்சனங்களை அவர்களும் சந்தித்தே தீரவேண்டும்.

இந்த ஜனநாயக பண்பு திமுக ஆதரவாளர்களிடையே இன்னும் நெருப்பாக இருக்கிறது. அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் இந்த அளவு ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களை வேறு எந்த கட்சியிலும் பார்க்க முடியாது என்றெண்ணுகிறேன்.

எல்லா கட்சிகளையும் தனித்தனியாக கேள்விக்கு உட்படுத்துவது எனது நோக்கம் அல்ல . ஓரளவு லாங் ஷாட் பார்வையில் எனது கருத்தை கூறுகிறேன்.

காங்கிரஸ் ஒரு மட்டுப்படுத்தப்படட ஜனநாயக கட்சியாக கருதப்படுகிறது . அதாவது அதற்குள் நடப்பது எல்லாம் வெறும் பதவிக்கான சண்டைகள்தான் . பாஜகவை பற்றி பேசவே வேண்டாம்  அது ஒரு கட்சியே அல்ல . அது ஒரு சாபம்.

அதிமுக ஒரு அசல் எம் எல் எம் கம்பனி . அதற்குள் நடக்கும் அத்தனை பிரச்சனைகளும் பணக்கொடுக்கல் வாங்கல் கமிஷன் தகராறு போன்றவை. 

ஏனையவை கொஞ்சம் ஜாதி கட்சிகள் . அவற்றின் தன்மைகள் பற்றி தெளிவான கருத்துக்கள் கூறுவது சுலபம் அல்ல.

நீண்ட வரலாறு கொண்ட இதர கட்சிகள் வரிசையில் கம்யூனிஸ்டு கட்சிகளை கூறலாம்.    அவற்றின் இன்றய நிலைமை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஆனாலும் மத்திய பொலிட் பீரோ போன்ற உயர் மடடத்தில் பாஜகவை போலவே பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க ஜாதியினரின் இருப்பே பெரிதும் உள்ளது.  அடிவாங்க ஏழைத்தொண்டன்  உயர் பொறுப்புக்களுக்கு அவாள் அன்  கம்பனி.  ஏழைத்தொண்டனின் விமர்சன வீரம் எல்லாம்  ஒரு  செலக்டிவ்  வாய்ப்பு கிடைத்த இடங்களில் மட்டுமே .

பத்து வீத  உயர்சாதி இட  ஒத்துக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களித்த தமிழக சி பி எம் எம்பி ரங்கராஜன் (பார்ப்பனர்) பற்றி எந்த ஒரு தோழரும் விமர்சனத்தை வைக்கமாடடார்கள் . அவ்வளவுதான் அந்த கட்சிகளின் கருத்தியல் பவிசு .  

இப்படி இந்திய கட்சிகளின் ஜனநாயக விழுமியங்கள் இருக்கும்போது , திமுக நிச்சயம் ஒரு படி மேலானதாகதான் இருக்கிறது.

உதயநிதி பற்றி உண்மையில் மாற்று கட்சியினர் பெரிதாக விமர்சிக்கவில்லை.  திமுக ஆதரவாளர்கள்தான் பெரிதும் விமர்சன அம்புகளை எறிந்தவர்களாகும்.

இந்த கருத்தியல் நெருப்பு இருக்கும் வரைக்கும் திமுகவை அசைத்து பார்க்க எந்த சக்தியும் கிடையாது.

 தொடரட்டும் இந்த  கருத்தியல் கோட்பாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக