வியாழன், 13 ஆகஸ்ட், 2020
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி காலமானார் ... தொலைக்காட்சி விவாத முடிவில் மாரடைப்பு
தினத்தந்தி : காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி காலமானார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காலமானார். டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ராஜீவ் தியாகி இன்று பங்கேற்றார். இதன் பின்னர் தமது வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ராஜீவ் தியாகியின் மரணத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக