அவ்விளம் பெண்ணின் துணைவர் அவரைத் தேடிய போது உணவகத்தில் ஆடைகள் இன்றி தனது துணை மயங்கிய நிலையில் நிலத்தில் இருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கு முன்னரே நந்தவராமன் உணவகத்தில் இருந்த சிசிரிவி கமராக்களை செயலிழக்கச் செய்து, தனது குற்றச்செயலை மறைக்க முயன்றுள்ளார். ஆயினும் பாதிக்கப்பட்ட பெண்ணி உடலில் ஏற்படுத்தப்பட்ட கீறல் காயங்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதணைகளில் இருந்து நந்தவராமனின் பாலியல் வன்கொடுமை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
நீதிபதி சானி பார்னஸ் நந்தவராமன் மோசமான குற்றவாளி என்றும் இவர் மீண்டும் இவ்வாறான குற்றங்களை இழைக்கக் கூடியவர் என்றும் சமூகத்திற்கு ஆபத்தானவர் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
மேற்படி உணவகம் மதுபானங்களை விற்பதால் அந்த உணவகத்திறற்கான மதுபரிமாறுவதற்கான அனுமதி கேதீசன் தர்மசீலன் என்பவரின் பெயரில் இருந்துள்ளது. ஆனாலும் அவர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்தோ அறிந்தோ இருக்கவில்லை என்பதும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
நந்தவராமனின் சட்டத்தரணி சாரா த்ரோன் வாதிடுகையில் தனது கட்சிக்காரர் இலங்கையில் இருந்து இனரீதியாக கொடுமைக்கு உள்ளாகலாம் என்பதால் பிரித்தானியாவுக்கு வந்ததாகவும் தனது செயலுக்காக வருந்துவதாகவும் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி பார்னஸ் இது பற்றி குறிப்பிடுகையில் அந்த இளம்பெண் மயக்க நிலையில் இருக்கும் போது வாயில் இருந்து நுரை தள்ளிய போதும் அவர்களது குடும்பத்தினர் குடும்பத்தினர் போன் செய்த போதும் அப்பெண்ணுடைய கழுத்தை நெரித்துள்ளீர். அப்பெண்ணுக்கு மருத்துவ உதவியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அவருக்கு உடலில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் மிகவும் கொடுமையானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் எழுத்து மூலமான சாட்சியம் அந்த ராத்திரியின் கொடூரத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக