சவுக்கு_சங்கர் : சங்கிகளை தனிமைப்படுத்துங்கள்.! சங்கிகளை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலக்குங்கள்.
நேற்று கேரளாவில் விமான விபத்து நடந்த செய்தி கிடைத்தவுடன், நள்ளிரவில், மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்ய பலர் வரிசையில் நின்றார்கள்.
சமூகவலைத்தளங்களில், இறப்பு எத்தனை ? காயம் எத்தனை பேருக்கு ? என பிரார்த்தனைகளையும், அனுதாபங்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் இதன் நடுவே, கேரளாதானே... அவனுங்களுக்கு வேணும். அய்யப்பனை
இழிவுபடுத்தியதற்கு கடவுள் கொடுத்த தண்டனை, அவனுங்க தங்கம் கடத்துறவனுங்க என்றும் பல்வேறு கருத்துக்களை பார்க்க முடிந்தது. இத்தகைய கருத்துக்களை பதிவிடுபவர்கள் சங்கிகள் மட்டுமே என்பதை சொல்ல வேண்டியதில்லை. இதனால்தான் சங்கிகள் மனிதகுலத்துக்கே விரோதிகள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். அனைத்து சங்கிகளையும் இணைப்பது ஒற்றைப் புள்ளி. அந்த புள்ளி - நரேந்திர மோடி. நான் இந்து வெறியன் அல்ல. மதவாதி அல்ல. ஆனா மோடியை புடிக்கும் என்று சொல்பவன் தான் ஆபத்தானவன்.
ஆறு ஆண்டுகால மோடியின் ஆட்சியை பார்த்த பிறகும், நாடு இன்று இருக்கும் அவல நிலையை பார்த்த பிறகும் ஒருவன் மோடியை தொடர்ந்து ஆதரிக்கிறான் என்றால், அவன் திமிரெடுத்த சங்கியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அறிவு வளர்ச்சி குறைந்த Retardஆக இருக்க வேண்டும். இந்த இரு தரப்பினரையும் நாம் ஒரு போதும் பேசி திருத்த முடியாது. அவன் வீட்டுக் கூரையில் நெருப்பு பற்றும் வரை அவன் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பான்.
சங்கிகளோடு பேசுவதும், விவாதம் செய்வதும் முழுக்க முழுக்க நேர விரயமே. அவர்கள் நம்மிடம் விவாதிக்க வருவதில்லை. விதண்டாவாதம் செய்வதற்காகவே வருகிறார்கள். நம் மன உறுதியை குலைப்பதும், நம் நேரத்தை வீணடிப்பதுமே அவர்கள் நோக்கம்.
சங்கிகள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் அவர்கள் உறவை துண்டியுங்கள். மோடி ஆதரவாளராக இருந்தால் பேச்சை நிறுத்துங்கள். மோடி போன்ற ஒரு பொய்யன், மோசடிப் பேர்வழி, இந்தியாவை சிதைத்த ஒரு நபரை தலைவனாக ஏற்றுக் கொள்பவனோடு நாம் பேசுவதற்கோ, விவாதிப்பதற்கோ ஒன்றுமே இல்லை. அவர்கள் உறங்குவது போல நடிப்பவர்கள். அவர்களை எழுப்ப முடியாது.
சங்கிகளை தனிமைப்படுத்துங்கள். நீ மோடி ஆதரவாளனா. இனி எனக்கு உன்னோடு பேச ஒன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்துங்கள்.
நம் நேரத்தை உபயோகமாக செலவழிப்போம். அன்பை பேணுவோம். நேசத்தை வளர்ப்போம்.
சவுக்கு சங்கர்
8 ஆகஸ்ட் 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக