திங்கள், 31 ஆகஸ்ட், 2020

உச்ச நீதிமன்றத்தின் ஜாதிக்கு ஒரு நீதி .. நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை.. பார்ப்பன பிரசாந்த் பூசணிக்கு வெறும் ஒற்றை ரூபா ..

லஞ்சியார் :இந்திய நீதிமன்றங்களில் நீதி சட்டத்தின் அடிப்படையிலோ நீதமாகவோ வழங்கபடுவதில்லை..
நீதியை பணம், அல்லது "மநு" தீர்மானிக்கிறது ..
நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து ஒருவர் உயர்நீதிமன்ற அலங்கரித்தவர் அவரின் தீர்ப்புகள் சர்ச்சைக்குள்ளானதில்லை ..ஆனாலும் அவர் தண்டிக்கபடுகிறார் .. அதே போல் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று தான் சொன்ன குற்றசாட்டுகளை திரும்ப பெற மறுத்தவருக்கு தண்டனை வழங்க வேண்டாமென அரசின் தலைமை வழக்கறிஞரே சிபாரிசு செய்வதும் .. கால அவகாசம் அளிப்பதும் கடைசியில் ₹1ரூபாய் தந்தால் போதுமென தீர்ப்பு எழுதபடுகிறது .. உடனே அங்கேயே மூத்த வழக்கறிஞர்
அந்த அபராதத்தை கட்டுவார் அதை பூஷண் ஏற்றுக்கொள்வார்.. இரட்டை நிலைபாடு நீதிக்கழகல்ல..
குற்றவாளி என தீர்ப்பு வழங்கபட்ட ஜெயலலிதாவிற்கு உடன் பிணை வழங்கி மூன்று மாதத்திற்கு மீள்விசாரணை நடத்தி தீர்ப்பு தரவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.. பிணையில் இருப்பவரை மத்திய அமைச்சரோ நட்புரீதியாக சந்திப்பார் யாரை நீதிபதியாக போடலாமென முடிவு செய்து கைக்குள் அடங்கும் நீதிபதியை தேர்வு செய்வார்கள் உடனே விசாரணையின் போது சினிமா நடிகனைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்பார் .. கூட்டிகழித்து பிழையோடு தீர்ப்பு வழங்குவார் நீதிதேவதைகள் கண்விழித்து காசு பார்க்கும் ..பார்ப்பானுக்கு தண்டனை 
மேல்முறையீட்டில் உச்சநீதி தீர்ப்பை காலங்கிடத்தி சாகும் வரை காத்திருந்து கடைசியில் ஜெயலலிதாவை உத்தமியாக்கியதெல்லாம் "நூல்" பாசத்தால் என்பதை யாவரும் அறிவோம்..
..
இந்திய நீதிமன்றங்களில் பாசிசவாதிகள் ஊடுறுவல் நீதியை சின்னபின்னமாக்குகிறது .. சமூக நீதிகளுக்கு
வேட்டுவைக்கிறார்கள் .. தீர்ப்பை எப்படி எழுதவேண்டுமென நாக்பூர் சொல்லும்.. இல்லையெனில் மரணம் வெல்லும் .. ரௌடிகளை கட்சியில் சேர்ப்பதின் பொருள் புரியும் .. அதிகம் கொலை செய்தால் அமைச்சர் கூட ஆகலாம் .. புதிய இந்தியாவில் எல்லாவற்றையும் பணம் பதவி கொண்டு வாங்கிவிட முடியும் .. தீர்பபை நாங்கள் சொல்வது போல் எழுதினால் எம்பி ஆகலாம் கவர்னராகலாம் என்ன நீதியை குழிதோண்டி புதைக்கவேண்டும் அவ்வளவுதான்..
சமீபகாலமாக இந்திய நீதித்துறையின் மீது படிந்துள்ள கறைகள் நாற்றமெடுக்கெடுக்கிறது .. நீதியின் மீது மக்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கவேண்டுமெனில் உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி நிலைநாட்டபடவேண்டும் .. இடஒதுக்கீட்டை முதலில் நீதிபதிகள் நியமனத்தில் செய்திடல் வேண்டும்
..
குலத்துக்கொரு நீதி என்பது அநீதி
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக