வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

புதிரை வண்ணார் சமுகம் .. ஆதி தமிழ் சமுகத்தின் சித்த வைத்தியர்கள்

பூர்வீக மிழர்ட்சி: தற்போது பல வரலாற்று ஆசிரியர்களால் சொல்ல படுவது புதிரை வண்ணார் என்பவர்கள் தலித் சமூகமான பள்ளர் பறையர்
சமூகத்திற்கு முடி திருத்துதல், அவர்களின் துணியை துவைத்து கொடுத்தால், இறப்பு நிகழ்வுகளில் துவக்கம் முதல் முடிவு வரை நின்று சொர்க்கவாசல் திறப்பு போன்ற பல சம்பிரதாயங்களை செய்பவர்கள் என்பது மட்டும் தான்..

ஆனால் புதிரை வண்ணார் என்பவர் மருத்துவர் இல்லாத காலத்தில் கிராமப்புறங்களில் பல உயிர்களை காப்பாற்றிய தமிழ் சித்த மருத்துவர் இந்த புதிரை வண்ணார் தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் சொல்ல மறந்தது ஏன் என்று தெரியவில்லை!!     இன்றும் பல கிராமங்களில் வைத்தியர் என்றால் அது இந்த புதிரை வண்ணார்கள் தான் ..
சிறிது காலத்திற்கு முன்பு சித்தவைத்தியம் பற்றி ஏடுகள் அதிகமாக கிடைத்தது என்றால் அதும் இந்த புதிரை வண்ணார்களிடம் தான் அதிகம்...

தகவலுக்காக
----------------------
https://groups.google.com/forum/…

------------------------------------

புதிரை வண்ணார்கள் பழங்குடியினர்
-------------
பழங்குடினராக வாழ்ந்து பிறகு பட்டியல் சமூகத்தில் இணைக்கப்பட்ட மக்கள் தான் இந்த புதிரை வண்ணார் சமூகம் காடும் காடு சார்ந்த இடத்தில் வாழ்ந்த புதிரை வண்ணனார் மக்கள் நிலப்பரப்பிற்கு வந்து வாழும்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தான் இன்று தலித் என்று சொல்லப்படும் ஆதி குடிகளான பள்ளர் பறையர் மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியில் புதிரை வண்ணார்களுக்கு என்று அந்த ஊரில் உள்ள நிலத்தை கொடுத்து அதில் தங்க வைக்கப்பட்டு சலவை செய்தல் மற்றும் முடித்திருத்தல் போன்ற தொழிலை கொடுத்து குடி அமர்த்தப்பட்டனர் அதற்கு கூலியாக அந்த ஊரில் கொடுக்கும் சாப்பாடை வாங்கீ சாப்பிட்டு வந்தனர்....

அதற்கு அடையாளமாக இன்றும் பெரும்பாலான புதிரை வண்ணார் மக்கள் பள்ளர், பறையர் சமூகம் வசிக்கும் பகுதியில் ஊர் இடம் என்று சொல்லக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்!!

காடுகளில் வேட்டையாடியும் காடுகளில் கிடைக்கும் பொருள்களை சாப்பிட்டும் வாழ்க்கை நடத்தி வந்த Scheduled #Tribes என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்களான புதிரை வண்ணார் மக்கள் என்று நிலப்பரப்பிற்கு வந்தார்களோ அன்றுதான் இந்த சலவை தொழில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது..

அதைபோல் தற்போது வரை கிராமப்புறங்களில் அரசு வேலை பார்த்தாலும் புதிரை வண்ணார் இனத்தை சார்ந்த நபர் வேட்டை ஆடுவதில் சிறந்த வள்ளவர்களாக இருப்பார்கள்

இறப்பு சடங்கு
-----------------------
அதைபோல் திருமண சடங்குகளை விட இறப்பு சடங்குகளே முதன்மையானதாக கருதப்பட்ட காலத்தில் அதை முன்னின்று நடத்திவர்கள் இந்த புதிரை வண்ணார்கள்தான் இன்றும் அந்த சடங்குகளை நடத்தி வருகின்றனர்..

இப்படி பல நல்ல தகவல்கள் இருந்தாலும் எனக்கு கீழ் ஒரு சாதி வேண்டும் என்ற கோற்பாட்டின் படிதான் வரலாற்று ஆசிரியர்களும் புதிரை வண்ணார் சமூகத்தை பற்றி தகவல்களை பதிவு செய்கின்றனர் என்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது...

உண்மையை கொண்டுவாருங்கள் 1870 க்கு முன்பு யாரு இந்த புதிரை வண்ணார்கள் வரலாற்று தேடலுடன்..

#Pudhurai #Vannars
#PudhuraiVannars
#PudhuraiVannar

பூர்வீக தமிழர் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக