செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கோமாவில் வடகொரியா சர்வாதிகாரி...கிம் ஜாங் உன்...ஆட்சியில் சகோதரி!!

vanthana Lakshm - tamil.oneindia.co : சியோல்: சமீபத்தில் வெளியாகி இருந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னின் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்று தென் கொரியாவின் மறைந்த முன்னாள் அதிபருக்கான முன்னாள் உதவியாளர் சாங் சாங் மின் தெரிவித்துள்ளார். 
மேலும், கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். Kim கோமாவில் இருக்கிறார்..அதனால் தான்...!-Korean Herald கூறுகிறது | Oneindia Tamil இவரது சகோதரி கிம் யோ ஜாங்க் தற்போது அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்தான், அமெரிக்கா, தென்கொரியா நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் ராணுவப் பணிகள் நம்பிக்கையான அதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் பகிர்ந்து கொண்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியா நாட்டின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் கடந்த பல மாதங்களாக பொது வெளியில் தலையை காட்டுவதில்லை. எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது அனைத்தும் மர்மமாக இருக்கிறது.  
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதையடுத்து அவர் கோமாவுக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்குப் பின்னர் அந்த நாட்டில் நடந்த ஒரு விழாவில் கிம் ஜாங் கலந்து கொண்டு இருந்தார். ஆனால், அது உண்மையான கிம் ஜாங் உன் கிடையாது. அவரைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் மற்றொருவர் என்று கூறப்பட்டு இருந்தது. 
 
 இந்த நிலையில்தான், அவர் கொரோனாவுக்கு அஞ்சி தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. 
ஆனால், இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. இடையே அவரது பொறுப்புக்களை அவரது சகோதரி ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் செய்தி வெளியானது. 
 
இந்த நிலையில் மீண்டும் இது உருவெடுத்துள்ளது. இதுகுறித்து தென் கொரியாவின் மறைந்த அதிபர் கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளர் சாங் சாங் மின் கூறியிருப்பதாக அவரது பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்தியில், ''கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார். அவருக்கு பதிலாக அவரது சகோதரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்'' என்று அவர் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் வடகொரியாவில் எந்தவொரு தலைவரும், தனது அதிகாரிகளை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மாட்டார். மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் அல்லது ஆட்சி கவிழ்ப்பு நடக்க வேண்டும். அப்போதுதான் அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் சமூக வலைதளங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் தெரிவித்து இருப்பதாக தி கொரியன் ஹெரால்டு பத்திரிகையில் வெளியாகி இருக்கும் செய்தியில், ''கிம் ஹாங் உன் கோமாவில் இருக்கிறார். அவரது வாழ்க்கை முழுவதுமாக முடிந்து விடவில்லை. இவருக்கு அடுத்தது யார் என்று முழுவதுமாக நாட்டில் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. ஆதலால், அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்ப ஆட்சிக்கு வரலாம். அதே சமயம் காலியிடம் நீண்ட நாட்களுக்கு பூர்த்தி செய்யப்படாது'' என்று தெரிவித்துள்ளார். 
 
கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கும் தகவலை சீனாவில் தனக்கு நம்பிக்கையாக இருப்பவர்களுடன் இருந்து பெற்றதாகவும் சாங் மின் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது அதிகாரங்களை தனக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதிக்குப் பின்னர் கிம் ஜாங் இன்னும் பொது வெளியில் மக்கள் முன்பு தோன்றவில்லை. கோமாவில் இருக்கிறார் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், உர தொழிற்சாலை திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டி பலூன்களை பறக்க விட்டு இருந்தார். அதன் பின்னர் அவர் மக்கள் முன்பு தோன்றவில்லை. அவரது சகோதரி கிம் யோ ஜாங்க்தான் நாட்டின் இரண்டாம் கட்ட தலைவராக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/north-korea-kim-jong-un-sister-kim-yo-jong-takes-responsibility-395459.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக