வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

பிரான்ஸ் நிர்வாண கடற்கரையில் கொரோனா பாதிப்பு

ceylonmirror.net : பிரான்சின் தெற்கே பிரபலமான நிர்வாண ரிசார்ட் ஒன்றில் கூடிய பொதுமக்களில் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் மான்ட்பெல்லியர் பகுதியில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Cap d’Agde ரிசார்ட் சென்று திரும்பியவர்களில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் அறிகுறிகளுடன் பரிசோதனை கூடங்களை நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ரிசார்ட் செல்லும் பொதுமக்களுக்கு சுகாதார   அதிகாரிகளால் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  அங்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த வாரம் திங்களன்று குறித்த ரிசார்ட்டுக்கு விஜயம் செய்தவர்களில் 194 பேருக்கு சொரோனா சோதனை மேற்கொண்டதில், 38 பேர் மட்டும் பாதிப்பின்றி தப்பினர். 

புதன்கிழமை 244 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை என தெரியவந்தது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை 310 பேருக்கு மேற்கொண்ட கொரோனா சோதனையில், முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனிடையே, நிர்வாண ரிசார்ட்டில் தொற்று விகிதம் அருகிலுள்ள கிராமத்தை விட நான்கு மடங்கு அதிகம் என சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக