வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி .. 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேறவில்லை .. உத்தர பிரதேசம்

Sergio Marquina : · மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு கருவி.
கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு அறுக்கத் தெரியாதவன் கையில் 1008 அருவா . இதன் பொருள் ஒரு செயலை செய்வதற்கு அறிவு முக்கியம் வெறும் கருவிகளை வைத்து கொண்டு ஒன்றும் செய்துவிட முடியாது என்பது. தமிழகத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தமிழும் தொழில்நுட்ப அறிவு பெறுவதற்கு சர்வதேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு ஆங்கிலமும் இங்கே பெரும்பான்மையானவர்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே நன்றாகவே தெரிந்திருக்கிறது.     தமிழர்களுக்கு இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படும்போது அதை கற்றுக் கொள்வதற்கு தேவையான மேம்பட்ட அறிவு இங்கே இருப்பதற்கு மூடத்தனமான கொள்கைகளை தமிழகம் இதுநாள்வரை கடைபிடிக்காத ஒரு நேர்மையான கல்விக் கொள்கைகளே காரணம்.

கல்வி அந்தந்த மாநிலங்களில் மொழி கலாச்சாரம் வரலாறு தொடர்பாக இருக்க வேண்டுமே தவிர தொடர்பற்ற வேற்றுமொழி மனிதர்கள் அவர்களின் இலக்கியங்களை படிப்பதில் தனிமனிதனுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது.

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்த நாள்வரை அந்தந்த மாநிலங்களின் தேவைக்கும் அவசியத்திற்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த தரத்தை குறைக்கவே செய்திருக்கிறது. மேம்பட்ட மாநிலங்களை தகுதிக் குறைவு செய்ய முயற்சிப்பது அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

வளர்ச்சி என்பது முன்னோக்கிய பயணமாக இருக்க வேண்டுமே தவிர பின் நோக்கி பயணிப்பதல்ல.

அறுபதுகளிலேயே அத்தியாவசிய மற்ற மூன்றாவது ஒரு மொழியை புறக்கணித்து நம் பிள்ளைகளுக்கு சுமையை குறைத்து அறிவு புகட்ட ஏதுவாக இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு தன்னை விட புத்திசாலியான மனிதர்களுடன் தொடர்பு கொண்டு தன்னையும் தனது தொழிலையும் தான்சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்த அறிவுசார் சமூகத்துடன் தொடர்பு கொள்ளவே ஒரு தொடர்பு மொழி தேவைப்படுகிறது.

முட்டாள்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் தற்போது தமிழர்களுக்கு இல்லை ஏனென்றால் தமிழகம் ஹிந்தி தெரிந்த மாநிலங்களை விடவும் மேம்பட்ட அறிவு கொண்டதாக திகழ்கிறது.

என்னால் உனது மொழியை கற்றுக் கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை உனக்கு இருக்கும் அறிவை பயன்படுத்தி எனது மொழியை கற்றுக் கொள் என்பது தான் இந்தியா முழுவதும் ஹிந்திக்காரர்கள் சொல்லும் செய்தி.

45 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் கவிஞர் மருதகாசி உங்களுடைய ஹிந்தி மொழி இந்துமத பர்னிச்சர்கள் அத்தனையையும் ஒரே பாட்டில் உடைத்து தள்ளி விட்டு போயிருக்கிறார்.

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)

செர்ஜியோ மர்கினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக