செவ்வாய், 21 ஜூலை, 2020

Youtube நோகாமல் நுங்கு தின்னும் போலி யூட்டூப் சேனல்கள்

Shalin Maria Lawrence : நோகாமல் நுங்கு திண்ணுபவர்கள்.
யூட்டுப் சேனலில் காசு பார்க்க வேண்டுமென்றால் உழைக்க வேண்டும்.புதிதாக சிந்திக்க வேண்டும்.புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும்.மூளையை உபயோகிக்க வேண்டும்.
ஆனால் இதயெல்லாம் செய்யாமல் பணம் சேர்க்கும் கேடுகெட்ட கும்பல் ஒன்று இருக்கிறது. என்டேர்டைன்மெண்ட் சேனல் என்கிற பெயரில் அபத்தமான குப்பைகளை பொழுது போக்கு என்கிற பெயரில் மணிக்கொரு முறை யூட்டுபில் உலவ விட்டு கொண்டிருப்பவர்கள்.அதிலும் காணொளிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு ,படங்களோடு.
"இந்த பிரபல நடிகை இறந்து விட்டாரா?!!"
"பட்டப்பகலில் இந்த tv நடிகை செய்வதை பாருங்கள்!!"
"முன்னாள் காதலனுடன் கிளுகிளுப்பாக போட்டோ பிடித்த நடிகை"
இது போன்ற மூன்றாம் தர தலைப்புகள் கட்டாயம் இருக்கும்.அப்படி இல்லையென்றால் உலகில் யூட்டுப் சேனல்களை அப்பட்ட மாக காப்பியடித்த நிகழ்ச்சிகள்."இவர் ஹேண்ட்பேகில் என்ன இருக்கிறது?!! அய்யயோ இந்த பிரபலத்தின் பேகில் இதுவா!!!" போன்ற உலக தர நிகழ்ச்சிகள். ஆங்கர்கள் என்கிற பெயரில் இங்கீதம் மயிரு மட்டை இல்லாத ஒருவர் உட்கார்ந்து கொண்டு நடிகைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டிருப்பார்.
இது போன்ற சேனல்களில் இது தான் உழைப்பு, இதுதான் க்ரியேட்டிவிட்டி.
சில சமயம் அதீத உழைப்பை போடுவார்கள்.
காலை சேனலுக்கு வந்ததும் "மச்சி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? ஏதாவது celebrity வீடியோ வந்து இருக்கா? ஏதாவது மேட்டர் தேரறுமா " என்று கேட்டு விட்டு கண்ணில் மாட்டிய வீடியோ சண்டைகளை வைத்து உருட்ட ஆரம்பிப்பார்கள்.

அவ புருஷன இவ வச்சு இருக்கா,இவ புருஷன் அவள வச்சி இருக்கா என்று கொஞ்சம் கொஞ்சமாக காணொளிகளை வெளியிடுவார்கள்.சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிடம் பேசி ஒரே டாபிக்கில் வித வித மான விடியோக்கள்.இவர்கள் யானை பசிக்கு சரியாக தீனி போடும் பிரபலங்கள்.இந்த பிரபலங்கள் பெரும்பாலும் மன அழுதத்திலும் கோபத்திலும் இருப்பார்கள்.யார் கிடைப்பார்கள் தன் பக்கத்து கதையை சொல்லலாம் என்றிருக்கும் இவர்களை தங்கள் இஷ்டத்துக்கு இந்த சேனல்கள் manipulate செய்யும்.
"மேடம் இன்னும் கோவமா" "மேடம் இன்னும் அசிங்கமா திட்டுங்க,மேடம் அழுங்க"என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி அந்த பெண்களின் மிக மோசமான பக்கத்தை பட்டை திட்டுவார்கள்.
வெறும் மைக்கை கொண்டு போய் கொடுக்க வேண்டியது தான் வேலை.எல்லா அந்தரங்கமும்,ரகசியங்களும் வெளிய கக்கபடும்.பதிவு செய்வது மட்டுமே இவர்கள் வேலை.இப்பொழுது கொரோணா வேறு வந்துவிட்டதால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே லைவில் இரண்டு பேரை மோத விடுவது.
எவ்வளவு கடுமையான உழைப்பு பாருங்கள் .
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் என்னதான் நிஜ வாழ்வில் ஆண்கள் அதிகமாக சண்டை போட்டு கொண்டாலும் இவர்கள் அதிகமாக பெண்களின் சண்டைகளில் தான் கவனம் செலுத்துவார்கள்.ஏனென்றால் மான தமிழர்களுக்கு பெண்கள் போடும் சண்டையில் தான் ஈடுபாடு அதிகம்.WWE பெண்கள் சண்டை போல் கிளுகிளுப்பான ஈர்ப்பு அதன் மேலே.
சாதாரண சண்டைகளை,வீட்டிலேயே பேசி முடிக்க வேண்டிய சண்டைகளை தூண்டி விட்டு,ரத்த களரியாக்கி ,சந்தி சிரிக்க வைத்து காசு பார்ப்பது இந்த சேனல்களின் வேலை.
உழைப்பே இல்லாமல் ஊதியம்.
இந்த நாதாரித்தனத்தை நாசுக்காக செய்வதற்கு பெயர் Youtube journalism.
இதையும் வாய்க்கு கிடைத்த அவல் போல போட்டு அரைத்து கொண்டிருக்கும் நாமும் கூட்டு குற்றவாளிகளே.நம் voyeurisa பசிக்கு அவன் தீனி போடுகிறான்.Simple.
Youtube என்பது வரம்.அதன் மூலமாக நாம் செய்ய கூடிய அற்புதங்கள் ஏராளம்.ஆனால் இது போன்ற சேனல்கள் நோகாமல் நோன்பு கும்பிட அந்த தளத்தை மிக கேவலமாக பயன்படுத்தி வருவது மிக மிக ஆபத்தானது.
மிக நூதனமான கட்ட பஞ்சாயத்து செய்து வரும் இந்த சேனல்களை காவல்துறை முறையாக கண்காணிக்க வேண்டும்.
And I want to tell these channels one thing clearly.Move your precious asses and earn.Don't fall to this level.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக