புதன், 22 ஜூலை, 2020

செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*

செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*
ஊடகத்துறையினர் இன்று தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலைஎதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள் ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில் உத்தரவிட முயல்கின்றன.
பல கருத்து உடையவர்கள் ஊடகத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில் குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்டவர்கள் மட்டும் ஊடகத்தில் இடம் பெறக்கூடாது என்ற பிரச்சாரத்தை அந்த சக்திகள் முன்வைக்கின்றன. அந்த சக்திகள், சில ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி குறிப்பிட்ட சிலரை நீக்க வேண்டுமென்றும் அச்சுறுத்துகின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்திலும் எமர்ஜென்சியிலும் பத்திரிகைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் தணிக்கை முறையை சந்தித்து அந்த அடக்குமுறையிலிருந்து வெற்றிகரமாக மீண்டு உள்ளன. இன்றைய சூழலில் தங்களைத் தாங்களே நடுநிலையாளர்கள், தேசபக்தர்கள், என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு புறப்பட்டுள்ள சக்திகளின் அச்சுறுத்தல் அதிகமாகி விட்டது. தமிழ்நாட்டில் திட்டமிட்ட நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.
இத்தகைய சக்திகளின் நெருக்குதல்களை ஊடகவியலாளர்கள் தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். தனிநபர் ஆபாசத் தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆளாக நேரிட்டுள்ளது. குடும்பத்தினர் மீதும் விமர்சனம் வைக்கின்றனர். இந்தப் போக்கு சுதந்திரமான ஊடகச் செயல்பாட்டுக்கு தடை ஏற்படுத்துகிறது.

காவல்துறை இப்பிரச்சனையில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசமைப்புச் சட்டம் வழங்கிய கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்மைத்துவம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்து இடுகிறோம்.
A.S.பன்னீர்செல்வம், Readers editor, The Hindu
இரா.ஜவஹர்
சுரேஷ் நம்பத்
ஜென்ராம்
விஜய்ஷங்கர், Frontline
சிகாமணி
R.ரங்கராஜன், சென்னை நிருபர்கள் சங்கம்
பொன்.தனசேகரன்
ராஜேஷ் சுந்தரம்
R.K.ராதாகிருஷ்ணன், Frontline
A.R.பாபு, தலைவர், கோயம்புதூர் பிரஸ் கிளப்
ராயப்பா
மயிலை பாலு
விஜய் சேகர்
‘தீக்கதிர்’ குமரேசன்
S.M.கணபதி
சாவிதிரி கண்ணன்
மணா
மணிஷ்யாம்
பீர் முகம்மது, இப்போது.com
கவின்மலர்
ஐயன் கார்த்திகேயன், ஆசிரியர், Youtun.in
M.அசீப், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்
R.விக்ரமன், அரசியல் பிரிவு ஆசிரியர், Galatta.com
தம்பி தமிழரசன்
கார்த்திகேயன்
பிரபாகர் தமிழரசு
தேஜஸ் ஹராட், Economic and Political Weekly
பாலகிருஷ்ணா கணேசன், The News Minute
கவாஸ்கர், தீக்கதிர்
S.P.பாரதி, The News Minute
ஆகாஷ் போயம், The Caravan
மேகா காவேரி, The News Minute
கிரீஷ்மா குதார்
செந்தளிர் சிவலிங்கம்
R.அபய், Web editor, The Caravan
ராஜேஷ் ராஜாமணி
C.சாகர், The Caravan
ஸ்ரீவித்யா
அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக