;Mageshbabu Jayaram - Samayam :
ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மக்களுக்கு எதிரி ஆனது எப்படி?<
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து இங்கே காணலாம்.
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்(Friends of Police) - சீருடை அணியாத ’காவலர்களின் நண்பன்’.
காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருப்பவர்கள்.
காவல்துறையினருக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பே
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகும். போக்குவரத்தை சரிசெய்வது, மூத்த
காவலர்களுடன் உதவிக்குச் செல்வது, திருவிழா காலங்களில் கண்காணிப்பு
பணிகளில் ஈடுபடுவது, குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு
எச்சரிக்கையூட்டுவது
போன்றவற்றிற்காக ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த அமைப்பு உள்ளது. இதில் ஏராளமான இளைஞர்கள் தன்னார்வலர்களாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் சுமார் 4,000 ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தற்போது வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் போலீசாகும் கனவுடன் இணைந்து வேலை செய்பவர்களும் இருக்கின்றனர். இவர்களின் செயல்பாடுகளுக்கு சிறந்த உதாரணமாக அனுசரண் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளிவந்த “கிருமி” படத்தைக் கூறலாம். அதில் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வரும் இளைஞர் கதிர் தனது பக்கத்து வீட்டுக்காரர் சார்லி மூலம் போலீஸ் இன்பார்மர் ஆகிறார். இந்த வேலையை சிறப்பாக செய்து அந்த பகுதி காவல் ஆய்வாளரிடம் நல்ல பெயர் வாங்குகிறார். பின்னர் தனது வேண்டாத சூதாட்ட கிளப்பில் நிறைய பணம் புழங்குவதாக கூறி ஆய்வாளரிடம் மாட்டி விடுகிறார்.
எல்லை மீறும் நடவடிக்கைகளா? - ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸிற்கு அதிரடி தடை!
அவரும் அங்கிருக்கும் லட்சக்கணக்காக ரூபாய் பணத்தை அள்ளிச் சென்றுவிடுகிறார். இதனால் கதிரை ஒரு கும்பல் கொலைவெறியுடன் துரத்துகிறது. இதில் சார்லி கொல்லப்படுகிறார். இதையடுத்து நடக்கும் அதிர்ச்சி, நம்பிக்கை துரோகம் என படம் விறுவிறுப்பு கூட்டும். இப்படத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸிற்கு இருக்கும் ஆபத்துக்கள் தெளிவாய் காட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் சமீப காலமாக இவர்களின் நடவடிக்கைகள் மீது மிகவும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. கைகளில் லத்தியுடன் பொதுமக்களை மிரட்டுவதும், அடித்து துன்புறுத்துவதும் என நிஜக் காவலர்களையும் தாண்டி ரவுடியை போன்ற மனப்பான்மையுடன் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாட்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசின் அட்டகாசங்கள் கணக்கின்றி சென்று கொண்டிருக்கின்றன. பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துவது, வாகனங்களை தாக்குவது, மிரட்டும் தொனியில் எச்சரிப்பது என பொதுமக்கள் அஞ்சி ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு ஆடத் தொடங்கியிருக்கின்றனர். அதிலும் சினிமாவில் வரும் போலீசைப் போன்று தங்களை நினைத்துக் கொண்டு கெத்து காட்டுகிறேன் என்ற பெயரில் நிஜக் காவலர்களையே மிஞ்சி விடுகின்றனர். ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். நிழல் காவலர்கள் செய்யும் தவறுகள் நிஜக் காவலர்களைத் தான் பாதிக்கும். வேறுவிதமாக பிரச்சினைகளைக் கொண்டு வந்தும் விட்டுவிடும்.
அப்படித்தான் சாத்தான்குளம் விஷயத்தில் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் இருவரையும் கஸ்டடியில் வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போலீசாருக்கு உதவியாக ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸும் அடி வெளுத்துள்ளனராம். இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதேசமயம் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணையில் தான் உண்மை வெளிவரும். தன்னார்வலர்களாக செயல்படும் இவர்கள் அரசியல் பின்னணி ஏதும் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் விதிமுறைகளை மீறுவது தானே வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது.
சாத்தான்குளம் வழக்கு: மதுரை நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம்... ஏன்?
பல்வேறு அரசியல் பின்னணியுடன் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசில் நுழைந்து பழி தீர்க்கும் வேலைகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதி, மத ரீதியாக காவல்துறையினருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற விஷயங்களை செய்து முடிக்க ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் இந்த அமைப்பு எதற்காக? உடனடியாக இதைக் கலைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தான் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில மாவட்டங்களில் சமூக பணிகளில் மட்டுமே ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவர் என்றும், காவல் பணியில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் சூத்திரதாரி பிலிப் இவர்தான் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக