ஞாயிறு, 5 ஜூலை, 2020

இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ்-கைது! ...வீதி விபத்து .. சி சி டி வி வீடியோ


குசால் மென்டிஸ் புள்ளிவிவரம்/tamil.mykhel.com/ : கொழும்பு : இலங்கை அணி கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ்-ஐ இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது. Kusal Mendis arrested. இலங்கையில் பரபரப்பு! ஞாயிறு அன்று காலை ஐந்து மணிக்கு அவர் ஓட்டிச் சென்ற கார், 64 வயது முதியவர் மீது மோதியது. அந்த முதியவர் அங்கேயே மரணம் அடைந்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து குசால் மென்டிஸ்-ஐ கைது செய்துள்ளது.
 இலங்கை கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கடந்த சில மாதங்களாகவே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸால் வருவாய் இழந்து நிதிச் சிக்கலில் உள்ளது. அதைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக எழுந்த புகாரில் சிக்கியது. கார் விபத்து கார் விபத்து அந்த பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்குள் இலங்கை அணி வீரர் குசால் மென்டிஸ் கார் விபத்து வழக்கில் சிக்கி இருக்கிறார். குசால் மென்டிஸ் இலங்கை அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார். சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்


 எப்போது நடந்தது?
இலங்கை அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்ட அந்த முகாம் கடந்த புதன்கிழமை அன்று முடிவடைந்தது. இந்த நிலையில், ஞாயிறு அன்று காலை 5 மணி அளவில் தான் காரில் கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியில் சென்றுள்ளார் குசால் மென்டிஸ்.
முதியவர் பலி அப்போது மிதிவண்டியில் வந்த 64 வயது முதியவர் மீது கார் மோதியது/. அந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சித்த நிலையில் அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து மென்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் அடுத்த 48 மணி நேரத்தில் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்த உள்ளனர். இந்த விபத்தில் அந்த முதியவர் அல்லது குசால் மென்டிஸ் மது அருந்தி இருந்தார்களா? என்பதே திருப்புமுனை கேள்வியாக உள்ளது. அதுபற்றி காவல்துறை ஆய்வு செய்து வருகிற
குசால் மென்டிஸ் ஓட்டிச் சென்ற காரின் முன்பகுதி லேசாக அடிவாங்கி இருக்கும் புகைப்படமும், அந்த முதியவரின் மிதிண்டியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்து இருக்கும் புகைப்படமும் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பேட்ஸ்மேன் ஆன குசால் மென்டிஸ் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 76 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். டெஸ்டில் 2995 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2167 ரன்களும், டி20 போட்டிகளில் 484 ரன்களும் எடுத்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக