வியாழன், 30 ஜூலை, 2020

நீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு செய்த துரோகத்தை விடவா? பட்டியல் போடும் கிழக்கு போராளிகள்

Reginold Rgi : மட்டு/அம்பாரை போராளிகள் இலங்கை அரசுடன் கைகோர்க்க காரணம் புலிகள்தான் வன்னியில் இருந்து எதற்காக படை எடுத்து வந்து எங்கள் போராளிகளை கொலை செய்ய வேண்டும் ?கிழக்கு பிளவின் போது புலிகளால் கொல்லபட்ட போராளிகளின் விபரங்களை தருகிறேன் இவர்களுக்கான நதியை யாரிடம் கேட்பது ?
2004 ஆண்டு பிரிவு ஏற்பட்ட உடன் கருணா அம்மான் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார் அவரை நிம்மதியாக வாழ விட்டிர்களா ? >எத்தனை முறை அவரை கொலை செய்ய முயற்சி செய்திர்கள்?
இறுதியாக இங்கிலாந்து அரசிடம் காட்டிக் கொடுத்திர்கள்?
செய்யிற நாசகார வேலை செய்து விட்டு கருணா அம்மான் துரோகியாம். அம்மான் துரோகி அல்ல நாம் அனைவரும் ஒரு விதத்தில் துரோகிதான்.. வெருகல் ஆற்றங்கரைல் வைத்து ஒரே நாளில் 210 போராளிகள் கொலை செய்யபட்டார்கள் .
இவர்களின் கொலை உங்கள் கண்களுக்கு அநீதியாக தெரியவில்லையா ? வெளிநாடு செல்வதற்காக கொழும்பு கொட்டவா பகுதியில் தங்கி இருந்த குகணேசன் உற்பட 9 போராளிகளுக்கு உணவில் சயனைட் கலந்து கொடுத்து சொந்த போராளிகளை கொலை செய்தது துரோகம் இல்லையா ?
கருணாவின் சகோதரன் றெஜி துமிலன் உற்பட 3 பேரை நித்திரையில் வைத்து சுட்டு கொலை செய்திர்கள் இது துரோகம் இல்லையா ?
முக்கிய கிழக்கு தளபதிகள் பொறுப்பாளர்கள் 63 பேரை குறிப்பாக ராபேட் ,தாத்தா ,விசு , துரை , வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொன்றிர்களே இது துரோகம் இல்லையா ?
மட்டு அம்பாறை மகிளிர் அணி தளபதி சாளி உற்பட 4 பெண் போராளிகளை பெண் என்று கூட பார்க்காமல் சுட்டு கொன்றார்களே இது உங்கள் கண்களுக்கு துரோகம் இல்லையா ?
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸிலி இரசாணையாகம் , ராஜன் சத்திய மூர்த்தி , மட்டக்களப்பு அரச அதிபர் கிழக்கு இப்படி எண்ணற்ற புத்திஜீவிகளை கொன்றொழித்தர்கள் இது துரோகம் இல்லையா ?
ஒன்றும் அறியாத எத்தனை அப்பாவி போராளிகளை கொலை செய்தார்கள் இதெல்லாம் உங்கள் கண்களுக்கு துரோகமாக தெரியவில்லையா ?
இப்படி எண்ணற்ற கிழக்கு போராளிகள் அன்று புலிகளால் மட்டக்களப்பு மாவட்டம் அம்பாரை எங்கும் தேடி தேடி வேட்டையாட பட்டார்கள் வேறு வழி இல்லாமல் தான் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து செயல் பட தொடங்கினார்கள் 2004 ஆண்டு லண்டன் போன கருணா அம்மான் திரும்பி வந்தது 2008 ஆண்டு அந்த நேரத்தில் வன்னி சண்டை தொடங்கி 60 நிலத்தை இராணுவம் கைப்பேற்றிய விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக