ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஒரு பார்ப்பனரை எப்படி என்கவுண்டர் செய்யலாம்? பொங்கி எழுந்த வட இந்திய பார்ப்பனர்கள்


சாவித்திரி கண்ணன் : பொங்கி எழுந்து விகாஷ் துபே, எண்கெளண்டரானதை எதிர்த்து விலாசித் தள்ளுகிறார்கள் உத்திரபிரதேசப் பிராமணர்கள்!
’’நீங்கள் பிராமண சமூகத்தின் நம்பிக்கையை கொன்று இருக்கிறீர்கள்’’
’’கொல்லப்பட்டது விகாஷ் மட்டுமல்ல,பிராமணர்களின் விசுவாசத்தையும் தான்’’
இதெல்லாம் சோஷியல் மீடியாக்களில் பிராமணர்கள் எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனங்கள்!
உத்திரபிரதேசத்தின் பிரபல தாதாவான விகாஷ் துபே ஒரு பிராமணர் என்பது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரை பிராமணர்கள் திரைமறையில் இருந்து கொண்டு ரவுடிகளை, கேடிகளை.. இயக்குவர்களாக,ஆதரிப்பவர்களாகத் தான் நாம் பார்த்திருக்கிறோம்! சங்கரராமனை இந்த விதமாகத் தான் சங்கராச்சாரியார் போட்டுத் தள்ளினார் என்பதையும் அறிவோம்!
அதாவது,மஸில் பவரைக் காட்டிலும் மண்டையில் உள்ள பவரைப் பயன்படுத்தி தந்திரமாக பின்னிருந்து இயக்குபவர்களாக தான் தமிழக வரலாற்றில் பிராமணர்கள் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.
ஆனால்,வட இந்தியாவில் அவர்கள் தாங்களே களத்தில் இறங்க துணிந்தவர்கள் என்பது காந்தி கொலையில் கோட்சே உள்ளிட்ட ஆறு முக்கிய குற்றவாளிகள் பிராமணர்கள் என்பதிலேயே தெரிய வந்த செய்தி தான்!

சுமார் மூன்று தசாப்தங்களாக உ.பியின் 'பிராமணலாபி' தான் ஏகப்பட்ட கொலைகள் செய்து அறுபது வழக்குகள் உள்ள விகாஷ் துபேவை காப்பாற்றியுள்ளதாம்!
சரி, நம்ம விஷயத்திற்கு வருவோம்! இங்க தமிழ் நாட்டிலே ரவுடி அமைச்சர் என்று பரவலாக தன்னுடைய பேச்சாலும்,செயல்களாலும் அறியப்பட்ட ராஜேந்திரபாலாஜி இன்று முழுக்க,முழுக்க அதீத இந்துத்துவ சிந்தனை போக்குள்ள பிராமணர்களின் செல்லப் பிள்ளையாகத் திகழ்வதையும்,சமூக ஊடகங்களில் அவரை ஆர்.எஸ்.எஸ் பிராமணர்கள் எப்படியெல்லாம் கூச்சமில்லாமல் துதிபாடி வருகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்! துக்ளக் வாசகர் அமைப்பு அவரை அழைத்து பெரிய விழா நடத்தி கொண்டாடுகிறது!
சாத்தான்குள போலீசாரை பின்னிருந்து இயக்கி வந்த இந்துத்துவ சக்திகளாக பிரண்டஸ் ஆப் போலீஸ் அறியப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
இந்தப் பதிவின் நோக்கம் பிராமணசமூகத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதல்ல! எல்லா சமூகத்திலும் நல்லவர்கள்,கெட்டவர்கள்,அப்பாவிகள் உள்ளனர்! பிராமணர்களும் அதற்கு விதிவிலக்கல்ல! ஆனால்,சாதி,மதம் ஆகியவற்றால் அதிகார ஆட்டம் ஆடுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனப்படுத்துகிறேன்.அவ்வளவே!
இந்தப் பின்னணியில் தான் ‘’சாத்தான்குள சம்பவத்தில் போலீஸார் மீது அப்படியொன்றும் தவறு செய்யவில்லை’’ என்றுவாதம் வைக்கிறார் குருமூர்த்தி!
’’காவல்துறை மீது கொலைவழக்கெல்லாம் பதிவு செய்ய வாய்ப்பில்லை’’ என்று முட்டு கொடுக்கிறார் பாண்டே!
மக்களுக்கான காவல்துறை என்ற அமைப்பையே தங்களுக்கான ஏவலர்களாக மாற்றத் துடிக்கும் – எப்போதுமே தங்களை நியாயவான்களாக காட்டிக்கொண்டு அநீதிகளை அதிகாரத்தின் மேல் அடுக்கிலிருந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கும் - இவர்களே விகாஷ் துபேயைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் என்று நான் நம்புகிறேன்!
சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக