ஞாயிறு, 12 ஜூலை, 2020

50 ரவுடிகளோடு வந்து திமுக எம் எல் யின் தந்தையை கொல்ல முயன்ற அதிமுக ரியல் (அதிமுக) எஸ்டேட் ...


Devi Somasundaram : ஒரு ஊடகத்தோட வேலை என்பது நாட்டு நடப்ப மக்களிடம் கொண்டு செல்வது தான் .எது நடந்ததோ அதை அப்படியே பேசுவதும் .மக்கள் நலன் சார்ந்து தகவலை தருவதும் தான் ஊடக வேலை . ..
ஆளும் கட்சியின் தவறை கேள்வி கேட்பது ஊடக கடமை .
ஒரு தனி நபரோ, தனி அமைப்போ ஊடகத்தின் விவாத தலைப்பில் வருவது ஊடக நாகரீகம் கிடையாது .
நம்ம ஊர்ல மட்டும் தனி நபர் தாக்குதலும் பொய்ச் செய்தியும் தான் ஊடகம் செய்து கொண்டு இருக்கு.
உண்மையான தகவல் என்ன...ஒரு ரியல் எஸ்டேட் க்ருப் கோவில் நிலத்தை ஆக்ரமிச்சு இருக்கு .அதை திமுக எம் எல் ஏ வோட அப்பா
பொது மக்களுடன் இணைந்து தடுத்து இருக்கின்றார்..

அந்த கோபத்தில் ரியல் எஸ்டேட் ஓனர் 50 ரவுடிகளுடன் எம் எல் ஏ வின் அப்பாவைக் கொல்ல முயன்றுள்ளனர் .. 70 வயதான அவர் தன்னை காத்துக்கொள்ள
அவர் தன்னிடம் இருந்த லைசன்ஸ் பெறப்பட்ட துப்பாக்கியால் கண்ணாடியில் சுட்டுள்ளார் ..அந்த கண்ணாடி சிதறல் பட்டு சிலர் காயம். .இதான் நடந்தது...
இது எப்படி திரிந்தது ?


கோவில் நிலத்தை ஆக்ரமித்தவர் நில உரிமையாளர்.கோவில் நிலத்தை மீட்க முயன்றவர் நில ஆக்ரமிப்பாளர் .இந்து கோவில் நிலத்தை மீட்க முய்ன்றவர் திமுக எல் எல் ஏ இந்து விரோதி .லைசன்ஸ் துப்பாக்கி கள்ளத் துப்பாக்கி ..நான் ஊடகத்தை திரித்து கூறினார்கள்னு கூட சொல்ல வரல...அப்படி நடந்து இருந்தாலும் நமக்கு தெரியாத வரை அப்படி சொல்ல முடியாது..தகவலை கிராஸ் செக் செய்து போடனும்ல ..அதான முறை .அது கூட செய்ய முடியவில்லை என்றால் ஏன் ஊடக வேலைக்கு வரனும் .
மாரிதாஸ் கள் இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டதுண்டா ? அதும் இந்து மத காவலர்னு தன்னை காட்டிக் கொள்பவர் நியாயப்படி இந்து கோவில் நிலத்தை மீட்க போராடின திமுக எம் எல் ஏ பக்கம் ல நின்று இருக்கனும் .செய்வாரா ? .
இதுல திமுக வ ஆதரிச்சா தான் சேனல்ல வேலை கிடைக்கிதாம்... கேக்றவன் கேணைன்னா கேப்பைல மைசூர்பா வடியுதும்பாங்க .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக