வெள்ளி, 3 ஜூலை, 2020

சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலையும் கைது செய்யவேண்டும்


ஆன்டனி வளன் : பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலை கைது செய்வாரா அதை உருவாக்கிய தற்போதைய சிபிசிஐடி தலைவர் பிரதீப் பிலிப்..
காவல் ஆய்வாளர் துணை ஆய்வாளர்கள் தலைமை காவலர் மற்றும் இன்னும் சிலர் கைதாகி இருக்கிறார்களே என்று அலட்சியமாய் இருந்து விடாமல்
இன்னும் மிக முக்கியமாய் சாத்தான்குளம் வழக்கில் நாம் பேச வேண்டியது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குண்டர்கள் இந்த கொலைவழக்கில் கைது செய்யப் பட வேண்டும் என்பது பற்றியும் தான்..
சிபிஐ கைக்கு இந்த வழக்கு செல்லும் வரை சிபிசிஐடி போலீசார் இதை விசாரிக்கணும் என்று சொல்லப்பட்டு விசாரணை சென்று கொண்டிருக்கையில்
சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் கைதாகி கொலை வழக்கில் சிக்கும் போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சல்லிப் பயலுக மட்டும் இன்னும் ஏன் கைது செய்யப்படல என்பது மக்களுக்கு புரியணும்..
இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உருவாக்கியவர் பிரதீப் பிலிப் ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி.
ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் மூலம் இன்றும் அதற்கான பல்வேறு நலன்களை இந்த பிரதீப் என்ற காவல்துறை அதிகாரி அனுபவித்து வருகிறார்.
உதாரணமாக ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்க்கு ஆண்டுதோறும் அரசு ஒதுக்கும் நிதி அவர்களுக்கு அளிக்கப் படாமல் அது ப்ரதீப் பிலிப் பாக்கெட்டுக்கு செல்வதான குற்றச்சாட்டு உண்டு.

இது அந்த அமைப்பு தொடங்கியதில் இருந்து கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஊழல் என்றே சொல்லலாம்..
அது மட்டுமல்லாது இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் சேரும் ஆட்கள் விசயத்திலும் அவரது முழுமையான தலையீடு உண்டு என்பதாக அறிய வருகிறேன்..
சரி..இவ்ளோ விசயம் எதற்கு...
ஆம்.இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை உருவாக்கிய ப்ரதீப் பிலிப் ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி தான் இன்று தமிழ்நாடு சிபிசிஐடி துறையின் தலைவராக இருக்கிறார்.
அவரது தலைமைக்கு கீழே தான் தற்போதைய சாத்தான்குளம் படுகொலைக்கான சிபிசிஐடி விசாரணை வருகிறது..
ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பற்றி கடுமையான விமர்சனங்கள் குறிப்பாக சங்கி கும்பல் தான் இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலிசாக இருப்பதான கடும் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் அந்த அமைப்பையே ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்து வரும் வேளையில்
பொன் முட்டையிடும் வாத்து போல தன் பணிக்கால ஓய்வுக்கு பிறகும் இதன மூலம் பெரும் வருமானம் ஈட்டும் இன்ன பிற மறைமுக நலன்களை பெற்றுத்தரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சிதைத்து விட கூடாது என்று மிக கவனமாக செயல்படுவார்..
அதனால் தன் தலைமைக்கு கீழ் இயங்கும் சிபிசிஐடி அதிகாரிகள் ப்ரண்ட்ஸ் போலீஸ் கும்பலை இந்த வழக்கில் கைது செய்ய மாட்டார்கள் அவர்களை தொட கூட மாட்டார்கள் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்..
எனவே இந்த கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலையும் உடனடியாக கைது செய்ய நாம் வலுவான குரல் எழுப்புவோம்.
ஆன்டனி வளன்
#BanFriendsofPolice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக